உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் -18

யேனும் ம்பின்மேற் பூசிக்கொள்ளுகின்றார்கள், அவ்வாறு செய்யவே. அழற்சியால் உடம்பெங் பங்கும் நிறைந்த வேர்க்குரு வேர்க்குரு என்னுஞ் சிறுபருக்கள் உதிர்ந்து போகின்றன.

இங்ஙனமெல்லாஞ் சந்தன மரமானது மக்களுக்கு உடல்நல மனநலங்களைத் தருஞ் சிறப்பினதாயிருத்தல் கண்டே, மேல்நாட்டில் உள்ள அரசர்களுஞ் செல்வர்களும் பண்டைக் காலத்திருந்தே இதன் கட்டைகளை இங்கிருந்து தம்முடைய மரக்கலங்களில் வருவித்து, அவற்றைப் பயன்படுத்தி வந்தார்கள். இற்றைக்கு மூவாயிர ஆண்டுகளுக்கு முன் மேனாட்டிற் சங்கோல் ஓச்சிய சாலமன் என்னும் வேந்தன், தன்னுடைய கப்பல்களை அடுத்தடுத்து இத்தமிழ்நாட்டிற்கு விடுத்து, இங்கிருந்து ஏற்றுவித்து வருவித்த அருஞ்சரக்குகளிற் சந்தனக் கட்டை அகிற்கட்டைகளுஞ் சொல்லப்பட்டிருத்தலை

நினைவுகூர்தல் வேண்டுமென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/184&oldid=1584840" இலிருந்து மீள்விக்கப்பட்டது