உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

157

குணத்திலோ மனத்துக்கினியவள், அருளுடையவள், நயம் மிகுந்தவள். இருந்தவாற்றால், அவளை ஒருநாட்டுப்புறத்து இடையன் மகளாகக் கூறுவது கூடாதாய்ச், சிறந்த ஒரு செல்வரின் புதல்வியாகக் கூறுவதே பொருத்தமாகத் தோன்றியது. அவளை முன்னறிந்தவர்கள்கூட இப்போதவள் அடைந்த நிலைமையினைக் கண்டு இறும்பூதுற்றனர், இன்னும், அவள் தன் கணவனுக்கு மிகவுங் கீழ்ப்படிந்து ஒழுகுபவ ளாயுந், தனக்குரிய எல்லாக் கடமைகளையுஞ் செய்வதில் ஆர்வம் மிக்கவளாயும், எவர்க்கும் எவ்வாற்றானு ஞ் சினத்தை யுண்டாக்காமற் பொறுமையுடன் நடப்பவளாயும் இருந்தமையால், அவள் கணவன் மனநிறைவு மிக்கவனாய் இம்மண்ணுலகத்திற்றானொருவனே நல்வினையிற் சிறந்த

வனென எண்ணினான்.

வந்தனர்.

சல்வ

அதற்கேற்பவே, கிரிசெலாளுந் தன் கணவனது அரசின் கீழ்வாழுங் குடிமக்களிடத்தில் அளியும் அருளுங்காட்டி நடந்தனள். அவளைப் பார்த்துப் பழகினவர்கள் எல்லாரும், அவள்மேற் பேரன்பு பாராட்டி வந்ததுமன்றி, மனமார அவளைப் பெரிது பெருமைப்படுத்தியும், அவளுடைய நலத்தையும் பெருந்தன்மையையும் நீண்ட ம் வாழ்க்கையையும் வேண்டி றைவனைத் தொழுதும் மேலும், அவடன் கணவனான காலதிய மன்னனைப்பற்றிஅக்குடிமக்கள் தாம் முன்னே கொண் டிருந்த எண்ணத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டியவ ராயினர். அவன் தனக்கியைந்த மனையாளைத் தேடித் தெரிந்தெடுத்த நுட்ப அறிவின் பான்மையினையும், அவனை யன்றி இவ்வுலகத்தில் வேறெவரும் அங்ஙனம் அதுகாறுஞ் செய்யமாட்டாமையினையும், ஓர் ஏழை நாட்டுப்புறக் குடிசை வீட்டினுட்பிறந்து வளர்ந்தமையால் உண்டான பரும்படியான வழக்கவொழுக்கங்களின்கீழ் மறைபட்டிருந்த அவடன் மதிப்பற்ற கற்பொழுக்க மாண்பினையும் பிறநலங்களையும் ஏனையோர் தெரிந்து அளத்தல் இயலாமையினையும் அவர்கள் எடுத்தெடுத்துப் பேசி வியந்து மகிழ்ந்தனர். சிறிது காலத்திலெல்லாம் அந்நாட்டவரே யன்றி அக்கம்பக்கத்துள்ள ஊரவர்களும், அம் மாதரசியின் அரிய வாழ்க்கை நலத்தையுந் தெய்வநேயத்தையும் அறநெஞ்சத்தையும் மற்றை நற்செய்கை

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/189&oldid=1584882" இலிருந்து மீள்விக்கப்பட்டது