உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

  • மறைமலையம் -18

கூடியமட்டும் யான் உவக்கும்படி நடந்துகொள்வையா? இன்னும், நீ அமைதியாகவும், பணிவாகவும், பொறுமை யாகவும் ஒழுகுவையா?" என்று கேட்டான். அதற்கவள், "பெருமானே, இறைவனது அருளுதவியால், யான் தங்கள் கருத்தின்படியே நடப்பேன்” என மறுமொழி நுவன்றனள்.

அதன்பின் அம்மன்னன் அவளது கையை மெல்லெனத் தன் கையாற்பற்றி அவளை அக்குடி னுட் செலுத்தி, அவள் அணிந்திருந்த இழிந்த ஆடைகளைக் களைவித்துத், தான் கொணர்ந்த உயர்ந்த பொற்சரிகைமிடைந்த பன்னிறப் ை களையும் மதிப்பரிய

பட்ட

66

மணிக்கலன்களையும்

அணிவித்து, அவளது கரிய செழுங்கூந்தலைப் பின்னிப் பிடர்ப்புறத்திடுவித்து, அவளது சென்னிமிசைப் பன்மணி குயிற்றிய பொன்முடியொன்றைத் தானே தன் கைகளாற் கவித்தனன். அதன்பின் அவன் அவளை அக்குடில்வாயிற் புறத்தே கொணர்ந்து நிறுத்தித், தன்னுடன் போந்தார் அனைவரும் வியந்து மலைக்க, அவளை நோக்கிக், “கிரிசெலா, நீ என்னை நின் கணவனாக ஏற்றுக் கொள்வையா?” என னவினான். அவள் உடனே நாணத்துடன் தலைகவிழ்ந்த வளாய், ஆம் எம்பெருமானே, மிகவும் ஏழையேனான என்னைத் தாங்கள் தங்கள் மனையாளாக ஏற்றுக் கொள்வீர்களானால்” என்று விடைபகர்ந்தனள். அதுகேட்டு அம்மன்னன், “நல்லது, கிரிசெலா, யான் வைக்கும் இத்தூய முத்தத்தால் நின்னை என் மனைவியாக உறுதிப்படுத்து கின்றேன்,” என நுவன்றுகொண்டே அவளுடைய சிவந்த கொவ்வை இதழ்களின்மேல் முத்தம் இட்டனன். அதன்பின் அவளை அவன் பால்போலுந் தூவெண்ணிறத்ததாகிய ஒரு மட்டக் குதிரைமேல் ஏற்றி, அங்கிருந்து சிறப்பாகத் தனது அரண்மனைக்குக் கொண்டு வந்தனன்.

பின்னர் அவன் அவளை மணந்துகொண்ட திருமண வி ழாவானது, அவளை அவன் ஓர் அரசன்மகளாக நினைத்துச் செய்த முறையாகவே மிக்க சிறப்புடன் நிறைவேறியது. அதற்குத் தக்கபடி அப்பெண்மணியும் ஓர் அரிய பிறவியேயாவள்; உடம்பு நலத்தாலுங் குண நலத்தாலும் அவள் ஏதொரு குறைபாடு மின்றித் திகழ்ந்தனள்; அழகிலோ அவள் நிகரற்றவள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/188&oldid=1584874" இலிருந்து மீள்விக்கப்பட்டது