உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

155

பின்னர்ச் சிலநாட்கள் சன்றன. சென்றபின், அம்மன்னனது மாளிகைக்கு நெடுந்தொலைவில்லாததான ஒரு சிற்றூரின்கண் உயிர்வாழ்ந்த ஓர்ஏழைக்குடியானவன் தன்மகள் புறத்தே அழகிலும் அகத்தே மனநலங்களிலும் மிகச் சிறந்தவளாக அம்மன்னனுக்குக் காணப்பட்டாள். அவளுடன் தான் இனிதுவாழக்கூடுமென்பது அவனுக்குத் தோன்றியது. ஆகவே, அம்மன்னன் மேலும் ஆராய்தலையொழித்து, அவளை மணஞ்செய்து கொள்ளும் ஒரே தீர்மானத்துடன், அவள் தந்தையுடன் சூழ்ந்து, அவனை அதற்கு உடன்படுத்திக் கொண்டனன். அதன்பின், அவன்தான் அரசுசெலுத்தும் நாட்டின்கண்உள்ள குடிமக்களையுஞ் செல்வர்களையும் தனது அரண்மனைக்கு ஒருங்கு வருவித்து, மணஞ்செய்தற்குத் தக்கதொரு நாளையும் அதற்குரிய எல்லாச் சிறப்புகளையுஞ் செய்துவைத்து, மணமகளைக்கொணர்தற்கு வந்தவர்கள் எல்லாருடனுங் குதிரையூர்ந்து அவளிருக்குஞ் சிற்றூர்க்குச் சன்றான். சென்று அவள் இருக்குங் குடிலில் அவள் தந்தையைக் காண்டற்குத் தான் ஊர்ந்துபோந்த புரவியி னின்றும் அவன் இழிந்தபொழுது, அம்மங்கைதான் தண்ணீர் முகக்கச் சென்ற கிணற்றினின்றுந் தண்ணீர்க்குடங்கொண்டு மற்றைப் பெண்களுடன் திரும்பி அக்குடிலுக்கு விரைந்து வருதலைக் கண்டான். கண்டதும் அவன் அவளை நோக்கிக் "கிரிசெலா, நின்தந்தை எங்குளார்?” என வினவினன். அதற்கு அவள் நாணத்துடனும் பணிவுடனும், “அருள்மிக்க அரசர் பெருமானே, அவர் வீட்டிலேதான் இருக்கின்றார்” என விடை பகர்ந்தனள்.

அதுகேட்டு அம்மன்னன் தன்னுடன் போந்தவர்களை அக்குடில்வாயிலில் நிறுத்தித், தான்மட்டும் அதனுட் சென்று, அங்கிருந்த அவடன்றந்தையை நோக்கி, "ஐய, நுங்கள் முன்னிலையிலும் என்னுடன் போந்தார் முன்னிலையிலும் நுங்கள் புதல்வியை யான் சிலகேட்டுத் தெளிய வேண்டும்” எனப் புகன்று, அவனை அக்குடில்வாயிற் புறத்தே கொணர்ந்து நிறுத்தி, அங்கு நாணமும் அச்சமும் மிக ஒரு பக்கத் தொதுங்கி நின்ற அம்மடந்தையைப் பார்த்து, “அழகிய கிரிசெலா, யான் நின்னை என் மனைவியாகச் செய்துகொண்டால், யான் சொல்வன செய்வனவாகிய எல்லாவற்றிலும் நீ நின்னாற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/187&oldid=1584866" இலிருந்து மீள்விக்கப்பட்டது