உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

163

இனி, அரசன் தான்கொண்ட கருத்தை நிறைவேற்றிக் கொள்ளுதற்கென்று குறிப்பிட்ட ஒருநாளில், அவன்றன் குருவினிடமிருந்து வந்தாற்போற் போலிக் கடிதங்கள் வந்தன. அவைகளை அவன் தன் குடிமக்களின் முன்னிலையிற் படிக்கும் படி செய்வித்துத், தன் குரு கிரிசெலாளைத் தான் நீக்கிவிட்டு வேறோரு நங்கையை மணந்துகொள்ள ஒருப்பட்டு விடை கொடுத்ததனை அவர்களெல்லார்க்கும் அறிவித்தனன். அதன் பின் உடனே அவன் கிரிசெலாளைத் தன் குடிமக்களின் எதிரே வருவித்து வைத்து அவளை நோக்கிக் கூறுவான்; "பெண்ணே, என் குருவினிடமிருந்து வந்த விடையானது, நின்னை விலக்கி விட்டு, யான் வேறோரு பெண்ணை மணந்துகொள்ளும்படி கற்பிக்கின்றது. என் முன்னோர்களெல்லாரும் உயர்குடிப் பிறப்பினராயும் இந்நாட்டுக்குத் தலைவர்களாயும் இருந்தமை யாலும், நீ ஓர் ஏழைக்குடிமகளாய் இருப்பதனாலும், யான் நின்னை மணந்துகொண்டதனால் என் முன்னோர் பிறப்பும் என் பிறப்பும் இழிபடைதலாலும், இனி யான் நின்னை என் மனைவியாக வைத்திருக்க விரும்பவில்லை; ஆதலால், நீ காணர்ந்த பரிசத்தொடு நின்னைத் திரும்ப நின் தகப்பன் வீட்டுக்குப் போக்கிவிட்டு, என் உயர்குடிப் பிறப்புக்கு ற்றவளாயும், அதனால் என் குடிமக்கள் குடிமக்கள் உள்ளத்திற்கு இசைந்தவளாயுங் காணப்படும் மற்றொரு மாதை யான் மனையாளாக மணந்துகொள்ள ஏற்பாடு செய்துகொண் டிருக்கின்றேன்.

இச்சொற்களைக் கேட்ட கிரிசெலாள், தன் கண்களிற் றதும்பிய நீரைப்பெருவருத்தத்தோடு தடைசெய்து கோண்டு, மற்றைப் பெண்மக்களின் இயற்கைக்கு வேறான வளாய்,“மாட்சிமிக்க அரசே, யான் அத்துணைப் பகுத்தறிவு வாயாதவள் அல்லேன்; எனது தாழ்ந்த இழிந்த குடிப் பிறப்பின் நிலைமையானது தங்களது உயர்ந்த சிறந்த

ப்பிறப்பின் நிலைமைக்கு எவ்வாற்றானும் ஒவ்வாத தென்பதை யான் என்றும் ஒப்புக்கொண்டவளே. யான் தங்களோடு கூடியிருக்கும்பேறு இறைவனது பேரருளாலுந் தங்களது தண்ணளியாலும் எனக்குக் கிடைத்ததேயல்லாமல், என்பாலுள்ள எந்த நலத்தினாலாவது கிடைத்தது அன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/195&oldid=1584933" இலிருந்து மீள்விக்கப்பட்டது