உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

மறைமலையம் 18

என்பதையும் யான் என்றும் ஒப்புக் கொண்டவளே. ஆதலால், தங்களால் வந்த இப்பேற்றைத் தாங்கள் திரும்ப வாங்கிக்கொள்ளுதற்குத் தங்கள் திருவுளம் இப்போது எண்ணுதலால், அதனை யானுந் தங்கட்கு மகிழ்வுடன் திருப்பிவிட வேண்டியவளாகவே இருக்கின்றேன். என்னை மணந்துகொள்ளுகையில் தாங்கள் என் விரலில் இட்ட இக்கணையாழியை இதோ தாழ்மையாகத் தங்கட்குச் சேர்ப்பிக்கின்றேன். இன்னும், யான் கொணர்ந்த மணப் பரிசத்தை யான் திரும்ப எடுத்துச் செல்லும்படி தாங்கள் எனக்குக் கட்டளையிடுகின்றீர்கள். ஆனால், அவ்வாறு எனக்குத் திருப்பிக்கொடுக்க வேண்டுவதொன்றுமில்லையே. ஏ னென்றால், என்னைத் தாங்கள் கொண்டுவந்தபோது யான் அணிந்திருந்த என்னுடைய எளிய ஆடைகளை முற்றுங் களைவித்தன்றோ என்னைக் கொண்டுவந்தீர்கள்? தங்களுக்கு இரண்டு மகவுகளை ஈன்ற இவ்வுடலம் அவ்வெளிய ஆடைகளையே அணிந்து செல்லல் வேண்டுமெனத் தாங்கள் எண்ணினால், இங்கிருந்து அங்ஙனமே செல்வேன். குற்ற மில்லாக் கன்னிமையொடு யாடு வந்த எனக்குத் திருமணக் காலத்தில் அணிவித்திருந்த ஆடைகளுள் ஒன்றை எனது மானத்தை மறைக்குமளவுக்குத் தாங்கள் உளம் இரங்கிக் கொடுத்தால் அதனையே எனது திருமணப் பரிசாகக் கருதிக்கொண்டு இவ்விடத்தைவிட்டுச் செல்வேன்" மொழிந்தனள்.

என

அம்மன்னனோ, தன் மனையாள் விளம்பிய இம் மொழிகளைச் செவிமடுத்துத், தன் நெஞ்சம் நீராய் உருகத் தன் கண்களும் அந்நீரை உகுக்கும் நிலையினவாகத் தன்னுளம் நெகிழ்ந்தும், அந்நெகிழ்ச்சியினைக் காட்டானாய்ச், சீற்றறமுஞ் சினமும் கொண்டான்போல் எழுந்து நின்று, "இவட்கொரு சிற்றாடைகொடுத்து, அவளைப்போகவிடுமின்கள்!” எனக் கரைந்தான். அப்போதங்கிருந்த வரெல்லாரும், பதின் மூன்றாண்டுகள் ஓர் அரசற்கு மனையாளாயிருந்த ஓர் அரசி ஓரேழைச் சிற்றாடையணிந்து வெளிச்சென்றாள் என ஒரு சிறுசொற் பரவாமைப்பொருட்டு நல்லதொரு பேராடை கொடுங்கள் என அவனை மிக இரந்து வேண்டியும் அவன் அதற்கு இசைந்திலன். மற்று, அவ்வரசியோ, அடிக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/196&oldid=1584941" இலிருந்து மீள்விக்கப்பட்டது