உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

165

தொடுதோல் இல்லாமலுந், தலைக்கு முடியில்லாமலுந், தன் மேலே ஒரு மாராப்புக்கூட இல்லாமலுந், தன் அரையுடம்பு தெரியச் சிற்றாடை யுடுத்தவளாய்த் தன்னைக் கண்டவ ரெல்லாம் ஆற்றாது புலம்பி அழ, வழிநடந்து சென்று தன் தந்தையின் இல்லிற் சேர்ந்தாள்.

அவடந்தையாகிய அந்நல்ல குடியானவனோ, தன் புதல்வியை அவ்வரசன் நீண்டகாலந் தன் மனையாளாக வைத்திரானென்றும், இப்போது நிகழ்ந்தபடி அவள் தன் பாற் றிரும்பிவந்து சேர்தலே நேருமென்றும், ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருந்தவனாதலால், அரசன் அவளை மணந்து கொள்ளுதற்கென்று ஒழுங்கு செய்த அந்நாளில் அவளுடம்பி னின்றுங் களைவித்தெறிந்த எளிய ஆடைகளைக் கருத்தாய்ப் பாதுகாத்து வைத்திருந்தான். ஆகவே, அவன் இப்போது அவைகளை யெடுத்துத் தன்மகள் கையிற் கொடுத்தான்; கிரிசெலாளும் அவைகளை வாங்கி யுடுத்துக் கொண்டு, பழமைபோல் தன் தந்தையின் இல்லப்பணிகளைச் செய்தல் மேற்கொண்டு, ஊழ்வினையானது தனக்கு விளைத்த அல்லல் களையெல்லாம் பெரியதொரு மனத்திட்பத்தோடு பொறுத்துக் கொண்டு தன் வாணாளைக் கழிப்பாளாயினள்.

இங்ஙனஞ் சில வைகல் கழிய, அவ்வரசனோ தனக் கிசைந்ததாகத் தோன்றிய ஒருநாளில், தான் ஓர் அரசன் மகளை மணஞ்செய்து கொள்ளப் போவதாகத் தன் குடிமக்கட்கு அறிவித்து, அத்திருமணவிழாவை மிகவுஞ் சிறப்பாக நடைபெறுவித்தற்கு வேண்டுவனவெல்லாஞ் செய்யும் படி கட்டளையிட்டான். அதன்பிற், கிரிசெலாளையும் அவடன் தந்தையின் இல்லத்தினின்றும் வருவித்து, அவளை நோக்கி, மாதே, யான் இப்போது மணந்துகொள்ளுதற்கென்று தெரிந்தெடுத்திருக்கும் நங்கை இன்னுஞ் சில நாளில் இங்கே வந்துசேர்வள். அவள் முதன் முதல் வரும்போதே அவளைச் சிறப்பாக வரவேற்றுக் கொண்டாட விழைகின்றேன். அவ்வரண்மனைக்கண் உள்ள மாடங்கள் ங்கள் மண்டபங்கள் மாளிகைகள் கூட ங்கள் அறைகள் முதலானவைகளை யெல்லாம் ஏற்றபடி ஒப்பனை செய்து அத்துணைச் சிறந்த கொண்டாட்டுக்கு ஒத்த வகையாக வேண்டும் பண்டங்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/197&oldid=1584950" இலிருந்து மீள்விக்கப்பட்டது