உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

166

மறைமலையம் -18

தொகுத்து அவையிற்றை அழகாக அமைத்து வைக்கவல்ல ஒரு பெண்பால் இல்லையென்பதை நீ நன்கறிவாய். ஏனை யெல்லாரையும்விட நீ இவ்வரண்மனைக்கணுள்ள எல்லாப் பகுதிகளையும் நுகர்பொருள்களையும் பண்டம் பாடி களையுஞ் செவ்வையாகத் தெரிவையாதலால் நின்னையிங்கு அழைப்பித்தேன். நினக்குத் தோன்றுமாறு இங்குள்ளவைகளை யெல்லாம் ஒழுங்குற அமைப்பாயாக! நினக்கு வேண்டிய நங்கை மார்களையுஞ் செல்வப் பெருமாட்டிகளையும் வருவித்து, நீயே இவ்வரண்மனைக்குத் தலைவியாக இருக்கும் முறை யிலிருந்து அவர்களை விருந்தோம்புவாயாக! திருமணம் முடிந்தவுடனே நீ நின் தந்தையினிடந் திரும்பி ஏகலாம்.’ என்றனன்.

இச் சொற்கள், ஏழைமையில் மேதகவுவாய்ந்து பொறுமைமிக்க கிரிசெலாளின் நெஞ்சத்திற் கூரிய வேலை நுழைத்தாற்போற் பாய்ந்தனவேனுந், தான் முன்னிருந்த செல்வ வாழ்க்கையின் உயர்வு அவடன் நினைவைவிட்டு எளிதாக நழுவிப்போயதேனும், அவள் தான் அவ்வரசன் மேல் வைத்திருந்த இணையற்ற காதலன்பை மறக்கமாட்டாளாய், “என் அருட்பெருமானே, தங்கட்கு வேண்டிய தோர் ஊழியத்தை அடியேன் என் முழுமனத்துடன் விரைந்து சய்யக் காத்திருக்கிறேன்.” எனப் பகர்ந்தனள். அவள் ஒரு சிற்றாடையுடன் அவ்வரண்மனையிலிருந்து புறம்போக்கப் பட்டாளாயினும், இப்போது தான் தன் தந்தையின் வீட்டிலிருந்து அணிந்துவந்த எளிய உடையிலிருந்தவாறே, அவ்வரண்மனையின் மண்டபங்கள் கூடங்கள் அறைகள் முதலியவற்றையெல்லாந் துப்புரவு செய்யப் புகுந்தாள்; அவ்விடங்களிலுள்ள நாற்காலிகள், பட்டுமெத்தை தைத்த சார்மணைக் கட்டில்கள், சலவைக்கற் பதித்த மேசைகள், பளிங்கு விளக்குகள், அழகிய ஓவியங்கள், பொன்வெள்ளிக் கலன்கள் முதலியவைகளை யெல்லாந் துடைத்துத் தூய்மை செய்தாள்; எவ்வெவை எவ்வெவ்விடங்களில் இருந்தாற் கண்கவர் வனப்பினவாய்த் தோன்றுமோ அவ்வவற்றை அவ்வவ்விடங்களில் அழகுற அமைத்துவைத்தாள்; அதன்பின் அடுக்களையிற் புகுந்து, அவ்வரண்மனையில் அவளே எல்லா வேலைகளையுஞ் செய்யுந் தொழுத்தைபோற் சிறிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/198&oldid=1584958" இலிருந்து மீள்விக்கப்பட்டது