உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

167

ஓய்வின்றிச் சமையற்பண்டங்கள் பாண்டங்கள் முதலானவை களை யெல்லாம் மிகவும் நேர்த்தியாகத் திருத்திவைத்தாள்.

வையெல்லாஞ் செய்தானபின், அரசன் அச்சிறந்த திருமண விழாவுக்கு அவ்வூரிலுள்ள நங்கைமார்களை யெல்லாம் வருவித்தான். திருமணம் அயரும் அந்நாளிற், கிரிசெலாள் நிறம் மங்கிய தனது நாட்டுத் துணியையணிந்த படியே அந்நங்கைமாரையெல்லாம் முகமலர்ச்சியுடன் வரவேற்று அவர்கட்குச் சிறப்புச் செய்தாள்.

ன்

இனி, அம்மன்னன், வேறோர் ஊரில் ஒரு குறுநில மன்னனை L மணந்து காண்ட தன் தன் உறவினளாகிய ஒரு சிற்றரசிடந் தன் புதல்வியையும் புதல்வனையும் ஒப்படைத்து, அவர்களைச் சிறந்த முறையில் வளர்த்து வருமாறு ஏற்பாடு செய்து வைத்தமை முன்னமே குறிப்பிக்கப்பட்டதன்றோ? அங்ஙனம் வைக்கப்பட்ட அவன்றன் புதல்வி இப்போது பதின்மூன்றாண்டுக்கு மேற்பட்ட அகவையினளானாள்; அவன் புதல்வனும் ஆறேழு ஆண்டுக்கு மேற்பட்டவனானான். ஆகவே, அரசன் தனக்கு இனிய நண்பரான ஒரு செல்வரை அச்சிற்றரசி யின்பால் விடுத்துத், தன் மகளையும் மகனையும் பரிவாரஞ் சூழப் பல்பெருஞ் சிறப்புடன் அவ்வம்மையார் தன்பால் தன் நகருக்கு அழைத்துவரல் வேண்டுமென்றும், அவர் கட்குந் தனக்குமன்றி வேறெவர்க்குந் தெரியாத அக்கன்னிப் பெண்ணை அரசனாகிய தான் மணஞ்செய்துகொள்ளப் போவதாக வழிநெடுக விளம்பரப்படுத்திவருதல் வேண்டு மென்றும் அறிவித்தான். அவ்வறிவிப்பினைக் கொண்டுசென்ற அச்செல்வருந் தம்மை நம்பி விடுத்த அச்செய்தியினை அச் சிற்றரசிக்குத் தெரிவித்து, அவளுந் தாமுமாக உறவினர் புடை சூழ அரும்பெருஞ்சிறப்புடன் அரசன் மகளையும் மகனையும் அழைத்துக்கொண்டு குறிப்பிட்ட நாளில் நண்பகல் வேளையில் அவ்வரசனது அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர். அப்போது அக்கம்பக்கத்தூரிலுள்ளார் பலருந், தம்மரசனுக்குப் புதுமனைவியாக வந்திருக்கும் அப்பெண்ணைப் பார்ப்பதற்காக அவ்வரண்மனைக்கண் வந்து குழுமினர்.

செல்வர்களுஞ் செல்வப்பெருமாட்டிகளுங் களிப்பு மிக்க அப்பெண்ணை வரவேற்று ஓம்பினர். அத்திருநாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/199&oldid=1584966" இலிருந்து மீள்விக்கப்பட்டது