உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

169

நடந்தாள் என்று கருதுதற்கும் மாட்டானாய், இனி இவளை இப்பல்பெருந் துன்பங்களினின்றும் விடுவித்து, இவள் தன்பாற் பெறுதற்குரிய உறுதி மொழியினைத் தான் புலப்படுத்துதலே செயற்பாலதெனத் தீர்மானித்தான்.தீர்மானித்து, அங்குள்ளார் எல்லார் எதிரிலும் அவன் அவளைத் தன்முன்னேவந்து நிற்குமாறு கற்பித்து, அவளை நோக்கிப் புன்னகை புரிந்து, “கிரிசெலா, இப்போது யாம் புதிது தெரிந்தெடுத்திருக்கும் மணப்பெண்ணைப்பற்றி நீ யாது நினைக்கின்றாய்?

66

66

ம்

என

வினவினான். அதற்கவள், எம்பெருமானே, இப்பெண் மணியை யான் பெரிதும் விரும்புகிறேன்;

ந்நங்கை அழகின் மிக்கவராய் இருத்தல்போலவே அறிவிலும் மிக்க வராய் இருப்பாரென்று நம்புகின்றேன். இம்மங்கையொடு தாங்கள் ஒருங்குகூடி, இந்நிலவுலகில் நீங்கள் ஒருவரே பெறற்கரும்பேறு பெற்றவராக வாழ்வீர்களென்பதில் யான் சிறிதும் ஐயுறு கின்றிலேன். என்றாலும், யான் தங்களை ஒன்று வேண்டிக்கொள்கின்றேன். என் சொல்லைத் தங்களுள்ளத்தில் ஏற்பிக்கும் வலிவு எனக்கிருந்தால், தாங்கள் தங்கள் முதல் மனைவியைச் சுடுசொற்களால் வெட்டிப் பேசியதுபோ ா லில்லாமல் தாங்கள் இவ்விளமாதை மிக்க அன்போடு நடத்துதல் வேண்டும். ஏனென்றால், அச்சுடுசொற்களைப் பொறுத்திருக்குந் தன்மையை இவ்விளமங்கைபால் யான் எங்ஙனம் எதிர்பார்க்கக்கூடும்? இப்பெண்மணி ஆண்டில் மிக இளைஞராயிருப்பதுடன், கல்விப் பயிற்சியில் மிக மென்மையாக வளர்க்கப்பட்டவராகவுமிருக்கின்றார். மற்றுத், தங்கள் முதன் மனைவியோ உழைப்பிலுங் கடுமுயற்சியிலுந் தொடர்பாக வளர்க்கப்பட்டவள்.'

இங்ஙனம் கிரிசெலாள், தன் மகளை மகளென்றறி யாமல் தன் கணவற்கு இரண்டாம் மனைவியெனவே நம்பி, அரசன் வினாயதற்குக் கள்ளமின்றி உண்மையாக அடக்கத் துடன் விடை பகர்ந்ததைக் கண்டு காலதியன் என்னும் அம்மன்னன் அவளை அழைத்துத் தன்னருகே யிருக்கும் படி கற்பித்துக், “கிரிசெலா, நீடு வியக்கத்தக்க நினது பொறுமையிற் பழுத்த கனியை நீ நுகர்தற்கு ஏற்றகாலம் இப்போதுதான் அண்மியது; என்னை ரக்கமில்லா வன்னெஞ்ச முரட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/201&oldid=1584983" இலிருந்து மீள்விக்கப்பட்டது