உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் -18

னெனக் கருதியவர்களெல்லாரும், யான் இழிந்ததேதும் மதிகெட்டுச் செய்திலேனென்பதை இப்போது கடைசி யாக அறிந்துகொள்வர். இங்ஙனம் ங்ஙனம் ஏதுக்காகச் செய்தே னன்றால், மணந்துகொண்ட ஒரு மனையாளின் நிலை எவ்வாறிருக்கவேண்டுமென்பதை நினக்கு அறிவுறுத்தவும்,

ஒருவன் ஒரு மனையாளை

எங்ஙனம் ராயினும்

எங்ஙனந் தெரிந்தெடுத்து

வைத்திருக்கவேண்டுமென்பதை எவர் எத்தகைய அவரெல்லார்க்கும் நன்கு உளத்திற் பதிய வைக்கவுமே அங்ஙனம் முன்னமே கருதிச் செய்தேன். இங்ஙனம் ஆராய்ந்து தெளிந்தமையால் இனி நின்னோடு யான் ஒருநாள் ஒருங்கு வாழப்பெறினும் அஃது எனக்கு என்றும் அழியாக் களிப்பினையும் இன்பத்தினையும் பயப்பதே யாகும் .இத்தகைய இன்பத்தினை எய்தும் பேறு எனக்கு வாயாது போய்விடுமோ எனவும், அத்தகைய மணவாழ்க்கை எனக்கு நேராது நழுவிவிடுமோ எனவும் யான் முன்னே மிகவும் அஞ்சியதுண்டு.

66

முதன்முறை ஆராய்ச்சியாக, யான் நின்னைப் பல வகையாலும் வைதுரைத்த கொடிய இன்னாமொழிகளை நீ அறியாதாய் அல்லை. என்றாலும், அம்மொழிகள் நின் பார்வையிலாதல், சொற்களிலாதல், நடக்கையிலாதல்

ஏதொரு மனக்குறையினையுங் காட்டாமைகண்டு, யான் விரும்பியபடி எனதுள்ளம் அடைந்த ஆறுதலுக்கோர் அளவில்லை. அங்ஙனமே, அதனையடுத்து நிகழ்ந்த ஆராய்ச்சிகளிலும் மனவமைதியுற்றேன். எனது சூறைக் காற்றையொத்த நடக்கையினால் யான் நின்னைவிட்டு அகலுமாறு செய்த அவ்வாறுதலை, நீ முன்னே பட்ட கொடுந்துன்பங்களுக்கெல்லாம் ஈடாக இப்போது ஒரு நொடியில் நினக்கு இனிதாக வருவிப்பேன். என் அழகிய காதற்கிரிசெலா, எனக்குப் புதுமணப்பெண்ணாக நீ கருதிய நங்கையை உளங்களித்து உவகைபொங்க நின் புதல்வியாகத் தழுவிக் கொள்! இச்சிறுவனையும் அவள் தம்பியாகத் தழுவிக் கொள்! இவ்விருவரும் நினைக்கும் எனக்கும் பிறந்த மக்களாவர்! இவ்விருவரையும் யான் கொலை செய்வித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/202&oldid=1584992" இலிருந்து மீள்விக்கப்பட்டது