உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

171

விட்டதாகக் கீழ்மக்க ளெல்லாரும் பிழையாக நினைந்தனர்! யான் நினக்குரிய காதற்கணவனே! நின்னை உலகத்திலுள்ள ஏனை மாதரார் எல்லாரிலும் மேலாகப் பாராட்டி, வேறு எந்த ஆடவனுக்குங் கிடைத்தற்கரிய மனையாளாக எனக்கு வாய்த்த நினக்கு உரிய பெரும் புகழினை நினக்கே தக்கதாக உரிமை யாக்கும் நின் காதற் றலைவனும் யானே!” என்று தன்னுள்ளம் பலவாற்றாற் கரைந்துருக உரைத்தனன்.

L

என்றிவ்வாறுரைத்து, அவன் அவளைத் தன் கைகளாற் றழிஇ அணைத்து முத்தமிட்டு, இதற்கு முன் எத்தகைய இடை யூற்றானும் வருவிக்கப்படாத கண்ணீர் இப்போது புதிது மடைதிறந்த யாறுபோற் றன் னழகிய முகத்தின் கீழ்ப் பெருகி யோடப்பெற்ற கிரிசெலாளை அழைத்துக் கொணர்ந்து தன் புதல்வியின் பக்கத்தே அமரவைத்தான். அப்புதல்வியும் அரியதான அத்திரிபு நிகழ்ச்சியைக் கண்டு அடைந்த இறும் பூதுஞ் சிறியதன்று. கிரிசெலாளுந் தன் மக்களிருவரையும் நிரம்பித் துளும்பிய அன்பினாற் றழுவி முத்தமிட்டாள். அங்கே குழுமியிருந்த செல்வருஞ் செல்வ மகளிரும் பிறருமெல்லாந் தாம் முன்னே கொண்டிருந்த ஐயமெல்லாம் ஒருங்கே தீரப்பெற்றுப், பேருவகை கிளரக், கிரிசெலாளுக்கு விலை யுயர்ந்த பொற்பட்டாடைகளும் மணிக்கலன்களும் அணிவித்து வைத்துப் பார்த்து மகழ்ந்தனரென்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/203&oldid=1585000" இலிருந்து மீள்விக்கப்பட்டது