உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

மறைமலையம் 18

4. மக்கள் வாழ்க்கையின் நிலையாமை

மக்கள் வாழ்க்கையின் நிலையாமையினை ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்,

“நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

وو

(குறள் 336) என்னுந் திருக்குறளால் நம்முள்ளத்தே நன்றாய் உறைக்கு மாறு எடுத்தருளிச் செய்திருக்கின்றார். "ஐயோ! நேற்றிருந்தான், இன்றைக்கு இல்லையே!” என்று கற்றார் முதற் கல்லாதார் ஈறான எத்திறத்தாரும் பேசிக்கொள்ளுதலையும் நாம் உலக வழக்கில் இடையிடையே கேட்கின்றோம். இங்ஙனம் உலகவழக்கில் காணப்படும் ஒரு பரிய உண்மை

யினையே திருவள்ளுவர் தாமும் எடுத்துரைத்தது நமக்கு அதனை நினைவிற் பதியவைக்கும் பொருட்டேயாம். எல்லா உண்மைகளும் உலக வழக்கிற் காணப்படுமாயினும், நந்நெஞ்சம் உடனுக்குடன் இன்பந்தரும் பொருள்களின் வயப்பட்டு அவை தம்மையே பெரும்பாலும் நினைந்து கொண்டிருந்தால், நிலையான நீண்ட இன்பத்தைப் பயக்கும் பொருள்களைப் பற்றிய நினைவு அங்கே புகுந்திருத்தற்கு இட டமில்லாமற்போகின்றது . ஆதலால், அந்நெஞ்சத்தில் நான்முகமாய் வந்து குவியுங் குப்பை கூளங்களை அகற்றிப், பேரின்பப்பொருளைப் பற்றிய நினைவு அதன்கட்டோன்றிச் சுடர்ந்தொளிருமாறு செய்வதே நல்லிசைப் புலமை மலிந்த பேராசியர்க்குரிய கடமையாகும். ஆகவே, திருவள்ளுவர் அறிவுறுத்திய இவ்வுண்மை, உலகில் இறந்து படுவாரைக் காண்வுழியெல்லாம் மக்கள் தமக்குள்ளே நெஞ்சம் நெக் குடைந்து பேசிக்கொள்ளுதலிலிருந்து புலப்படுகின்ற தனும், மற்றை நேரங்களில் அஃது அவருள்ளத்திற் றோன்றாமல் மறைந்து போதலின். அஃது அப்பேராசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/204&oldid=1585008" இலிருந்து மீள்விக்கப்பட்டது