உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

173

அருளிய வாய்மொழியிலிருந்து நமக்கு எஞ்ஞான்றும் மறவாமல் நினைவூட்டப்படா நிற்கின்றது என்க.

நன்று, மக்கள் வாழ்க்கையானது ஒரோவொருவர் பால் என்றோ ஒரோவொருகாற் சடுதியில் மடிந்து மறைந்து போகக் காண்கின்றனமேயன்றி, எல்லா மக்களிடத்தும் அஃது ஒரே காலத்தில் இல்லையாய்ப்போகக் காண்கின்றோம் இல்லையே; அங்ஙனமிருக்கச், சிறுபான்மையாய் நிகழுஞ் சில நிகழ்ச்சி களைக்கொண்டு, மக்கள் வாழ்க்கையானது சடுதியில் மாய்வ தன்று பெரும்பான்மைபடக் கூறுவது பொருந்துமோ வெனிற்; பொருந்தும்; நில அதிர்ச்சியினாற் பெரிய பெரிய நகரங்கள் அழிந்துபடுங்கால் அவற்றின் கணிருந்து உயர்ந்த மாடமாளிகைகள் இடிந்தழிய, அவற்றின்கண் உயிர்வாழ்ந்த நூறாயிரக்கணக்கான மக்களும் ஒரு நொடியில் மாண்டு போனமை கேட்டதில்லையா? 1908 ஆம் ஆண்டு நேர்ந்த நில அதிர்ச்சியினால் நீரும் நெருப்பும் பொங்கி மெசீனாப் பட்டினத்தை அழிக்க, அதிலிருந்த எழுபத்தேழயிரமக்கள் ஒருசிறு பொழுதில் மாண்டுபோனார்கள்! அமெரிக்கா தேயத்திலுள்ள சான் பிரான்சிஸ்கோ என்னும் பெரு நகரானது பதினெட்டு அடுக்குகள் வாய்ந்த பெரும்பெரு மாடங்கள் உள்ள பெருஞ் செல்வநகராகும்; அஃது 1906 ஆம் ஆண்டு, ஏப்பிரல், 22 ஆம் நாட் சடுதியிற் றோன்றிய நில அதிர்ச்சியினால் அதன் கணிருந்த அக் கட்டிடங்கள் பல முகமாய்ப் பிளந்துவிழ, அவற்றின்கணிருந்த மக்களுங் கோடிக் கணக்கான பொருள்களும் அழிந்தன! சின்னாட்களுக்கு முன் நம் இந்திய நாட்டின் வடபகுதிக்கண் நில அசைவினால் உண்டான உயிரழிவு பொருளழிவுகளின் மிகுதியை அறிந்து வருந்தாதார் யார்? இங்ஙனம் அடுத்தடுத்து இந்நிலவுலகின்கண் ஆங்காங்கு நேரும் நில அசைவினாலும், நீர்ப்பெருக்கினாலும், எரிமலை நெருப்பினாலுந் திடுமெனச் சிறிது நேரத்தில் இதுகாறும் அழிந்துபட்ட உயிர்களையும் பொருள்களையுங் கணக்கெடுத்தல் எவராலேனும் ஏலுமோ? அதுகிடக்க.

நமது இந்தியநாட்டிலும் பிறநாடுகளிலுங் கொள்ளை நோய் (plague) கொள்ளைக் கழிச்சல் ( cholera) அம்மை, நச்சுக்காய்ச்சல் முதலான நோய்களால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திங்களும், ஒவ்வோராண்டும் மடிந்தார் மடிவார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/205&oldid=1585017" இலிருந்து மீள்விக்கப்பட்டது