உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் -18

தாகையை நினைத்துப் பார்க்குங்கால் நெஞ்சந் திகீ ரென்கின்றது! இவ்விந்திய நாட்டில் 1896 ஆம் ஆண்டிலிருந்து 1903 ஆம் ஆண்டு வரையிற் கொள்ளை நோயால் மடிந்தார் தாகை இருபத்தொரு லட்சத்து ஐயாயிரத்து ஐந்நூற்று நாற்பத்தெட்டு என்றும், 1891 இலிருந்து 1900 வரையிற் கொள்ளைக் கழிச்சலில் மாண்டார் தொகை நாலுலட்சத்து ஐம்பதினாயிரத்து ஐந்நூற்றிரண்டு என்றும், அம்மையிற் சத்தார் தொகை எண்பத்தீராயிரத்து ஐந்நூற்றெண்பத் தெட்டு என்றும், நச்சுக் காய்ச்சலில் இறந்தார் தொகை நாற்பத்துமூன்று லட்சத்து அறுபத்து மூவாயிரத்து ஐம்பத் தைந்து என்றுங் கணக்கெடுத்திருக்கின்றார்கள். இன்னும் பல காரணங்களால் அழிந்தொழிவார் தொகையுஞ் சாலப்பெரிது. ஆதலால், மக்கள் ஒருங்கே ஒருகாலத்தோரிடத்து மாயக் கண்டிலமென்றுரைப்பது

உண்மை நிகழ்ச்சிக்கு மாறா மென்றுணர்ந்து கொள்ளல்வேண்டும். எனவே, மக்கள் வாழ்க்கையானது பொதுவாகவே நிலையில்லாததென்பது தெளியப்படும்.

அஃது உண்மையேயானாலும், மக்கள் ஒவ்வொருவருந் திடீரென இறந்துபடுவரென்பது ஏற்றுக்கொள்ளற் பாலதோ வெனின்; எவ்வளவு கருத்தாய்த் தமதுயிரைப் பாதுகாத்த வரும், அவரும் எவரும் எதிர்பாராமலே சடுதியிற் சாதலைப் பார்த்ததில்லையா? பார்வைக்குக் கருங்கல் வடிவம்போல் அழுத்தந் திருத்தம் வாய்ந்த உடம்புடையவர்களாயிருந் தவரும் நெஞ்சடைப்பினால் ஒரு நொடியில் உயிர்துறந்ததைப் பார்த்துங் கேட்டும் இருக்கின்றேம். பெருஞ்சினங் கொண்டு அதனால் ஓரிமைப்பொழுதில் மாண்டவர் எத்தனையோ பேர்! தமக்குயிர்போல் அன்பராயிருந்தார் சாவக்கேட்டு, ஆற்றாமை யால் உடனே உயிர் நீங்கினார் எத்தனையோ பேர்! கல்தடுக்கி வீழ்ந்து, வீழ்ந்த அந்நொடியே உயிர்மாய்ந்தார் எத்தனையோ பேர்! உறக்கத்திற் பாம்பு தீண்டப்பட்டுக் கண்விழியாமலே இறந்து கிடந்தார் எத்தனையோ பேர்! இஞ்ஞான்று நம் கண்ணெதிரே இங்ஙனம் எதிர்பாராமலே சடுதியில் இறப்பார் போலப், பழைய நாளிலும் எதிர்பாராப் புல்லிய காரணங் களால் இறந்தார் பலரை ஆங்கில ஆசிரியரொருவர் எடுத்துக் காட்டி இருக்கின்றார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/206&oldid=1585025" இலிருந்து மீள்விக்கப்பட்டது