உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

  • மறைமலையம் -18

இதடாக்கு' என்பவர் வயலில் அறுப்பு அறுக்கையில் மிகவும் நாவறட்சிகொண்டுந், தன்குரு இட்ட கட்டளைப் படி ஒரு துளி தண்ணீரும் பருகாதிருந்தமையால் அங்கேயே உயிர்நீங்கப்பெற்றார்.

‘ஆறாம் லூயிசு' என்னும் மன்னன் தன் குதிரைமேல் ஏறிச்செல்லுங்காற் குறுக்கே ஒருபன்றி அக்குதிரையின் கீழ் ஓட, அதனால் அக்குதிரை தடுக்கிவிழ,அம்மன்னனுங் கீழ்விழுந் துடனே மாண்டுபோனான்.

ஆதவர்' என்னும் புலவர் வறுமையால் உணவின்றிப் பட்டினியாயிருத்தல் கண்டு ஒருவர் அவர்க்கு ஒரு பொற்காசு கொடுத்தனர். அவர் அக்காசைமாற்றி ஓர் அப்பம்வாங்கி, அதனைப்பிட்டுப், பிட்ட துண்டைவாயிலிட்டு மென்று விழுங்குகையில் உயிர் நீங்கினார்.

'பிலோமினர்' என்பார் தாம் உண்ணுதற்கென்று வைத்த அத்திப்பழங்களை ஒரு கழுதை வந்து தின்ன, அது கண்டு அவர் மிகுதியாய்ச் சிரித்தமையால் உயிர் பிரியப் பெற்றார்.

‘குயினிலாடன்’ என்னும் ஒரு மருத்துவன் பிறன் ஒருவன் கையிற் றைத்த ஒரு சிராயைப் பிடுங்கி எடுக்கையிற் றன்கையிற் சிறிது காயம்பட்டு இறந்துபோனான்.

‘கியூகர்' என்னும் ஓவியர் தாம்வரைந்த ஒரு குறிகாரக் கிழவியின் உருவைக் கண்டு தாமே மிகுதியாய்ச் சிரிக்க, அதனால் உயிர்துறக்கலானார்.

இவ்வாறு முன்னாளிலும் பின்னாளிலும் மிகச்சிறிய காரணங்களாற் சடுதியில் மாண்டுபோயினார் தொகையைக் கணக்கெடுக்கப் புகுந்தால், அது கணக்கிலடங்காது. ஆகையால், மக்கள் தனித்தனியே தனித்தனியே திடீரென மாளுதல் நாடோறும் ஆங்காங்கு நிகழும் உண்மை நிகழ்ச்சியே யல்லாமற் பொய்யாகாது. ஆகவே, பெருந்தொகையினரான மக்கள் ஒரு நொடிப்பொழுதில் மாய்தலும், அவருள் ஒவ் வொருவர் ஒவ்வொருகாற் றிடுமென மாய்தலும் ஆங்காங்கு அடுத்தடுத்து நிகழ்தல் விரிந்த ஆராய்ச்சியுடையார்க் கெல்லாம் இனிது விளங்கிக்கிடத்தலின், மக்கள் வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/208&oldid=1585042" இலிருந்து மீள்விக்கப்பட்டது