உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

177

யானது எந்தவகையிற் பார்த்தாலும் நிலையில்லாததேயா மென்பது நன்கு பெறப்படுமென்க.

நன்று, அங்ஙனம் மக்கள் வாழ்க்கையானது நிலை யில்லாததாய் ஒழிதல் உண்மையேயாயினும், அதைப்பற்றி நாம் அடுத்தடுத்து நினைதலாற் பயன் என்னை? நாம் நிலை யில்லாமல் எந்தநேரத்தில் மாய்வமோ என ஒருவர் அடிக்கடி எண்ணிப்பார்ப்பராயின், அவர் அதனால் ஏதொரு முயற்சியுஞ் செய்வதில் மனவெழுச்சி பெறாது, அறிவுகுன்றிச் செயலற்றுத் துயரங்குடிகொள்ளப்பெற்ற நெஞ்சினராய்ச், சாநாள் வருமுன்னரே அதனை எதிர்பார்த்திருந்து, தமக்கும் பிறருக்கும் பயன்படுதலின்றிக் கழிவரல்லரோ? மேலும், மக்களெல்லாரும் "நாம் நிலையாயிருப்போம்; நிலையாயிருந்து பல்வேறு இன்பங்களை நுகர்வோம்; அங்ஙனம் நிலையாயிருந்து இன்பம் நுகருதற்குரிய நாம் இன்பம் தரும் பொருள்களையும் மக்களையுந் தேடித் தெரிந்து நம்முடனே வைத்துக்கொள்ளக் கடவோம்’ என எண்ணுதலாலன்றோ, அவர் தமது வாழ்க்கையைச் செவ்வனே நடைபெறுவித்தற்காம் அறிவும் அதனொடு பெருமுயற்சியும் உடையராய் ஒழுகுகின்றனர்? இத்தகைய ஒழுகலாற்றால் அவர் தமக்குந் தம்மைச் சார்ந்தார்க்கும் பயன்படுதலொடு தம்மவரல்லாத ஏனைப் பொதுமக்கட்கும் பயன்பட்டு வருகின்றனர். வ்வாறு

சில

தம்மை நிலையாகவெண்ணி வாழ்தலாலன்றோ மக்கள் வாழ்க்கையானது பல்லாயிர ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழாநிற்கின்றது? இனி, இவ்வாறன்றி, மக்கள் ஒவ்வொரு வருந் தமது வாழ்க்கை நிலையின்றி மாயுமியல்பினையே எண்ணியெண்ணி நெஞ்சம் நோவராயின் ஒரு ண்டுகளில் மக்கள் வாழ்க்கையே இம்மாநிலத்தின்கண் இல்லையாய் ஒழியுமன்றோ? ஆகையால், நிலையாமையை எண்ணிப் பார்ப்பதும் அதனை எண்ணிப் பார்க்கும்படி கற்பிப்பதும் நலந் தருமோவெனிற் கூறுதும்.

நிலையாமையை எப்போது நாம் எண்ணிப்பார்த்தல் வேண்டும், எப்போது நாம் அதனை எண்ணிப்பார்க்க லாகாது என்று ஒவ்வொருவரும் பகுத்துணர்ந்து ஒழுகல் வேண்டும். நிலையாமையை எப்போதுமே எண்ணிப் பாராதவர்கள், செங்குத்தான உயர்ந்ததொரு மலையுச்சியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/209&oldid=1585050" இலிருந்து மீள்விக்கப்பட்டது