உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

  • மறைமலையம் -18

ஓரத்தில் நிற்கும் கண்ணில்லாக் குருட னாருவனையே ஒப்பராதலால், அவர் தமது வாழ்க்கையின் இடையிடையே வரும் அல்லல்களுக்கு ஈடுகட்ட மாட்டாதவர்களாய் அறிவும் அன்பும் அறமும் இன்பமும் இன்றிப், புகழும் புண்ணியமுங் கடவுள் நேயமும் இன்றிச் சடுதியில் மாண்டுபோவர்; அங்ஙனஞ் சடுதியின் மாளாமல் நீண்ட நாளிருப்பினும் அவரது இருப்புப் பயனற்ற முண்மரத்தின் இருப்புகே ஒப்பாகும் . ஆசிரியர் திருவள்ளுவ நாயனார்.

66

"அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றன் மரந்தளிர்த் தற்று”

(குறள் 78)

சங்

என்றருளிச் செய்தது உண்மையன்றோ? இனி, நிலையாமை யினையே எந்நேரமும் எண்ணிப் பார்ப்பவர்கள், செங் குத்தான அவ்வுயர்ந்த மலைமுகட்டின்மேலிருந்து கீழுள்ள பெரும்பள்ளத்தாக்கை நோக்கி உள்ளந் திகில் காண்டு அதனைவிட்டு அப்புறம் அகலாமல் அப்புறம் அகலாமல் அதன்கீழ்த் தன் வயமின்றியே விழுந்தொழியப்போகுங் கண்ணுடையா னொருவனையே ஒப்பராதலால் அவரும் அறிவும் அன்பும் இல்லாமல், அறமும் புண்ணியமுஞ் செய்யாமற் புகழுங் கடவுள் நேயமும் வாயாமற் சடுதியிலே மாய்ந்துபோவர்; அன்றி அங்ஙனம் மாயாது நெடுநாள் இருப்பினும், அவரது இருப்பு, 'ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய்"

66

(குறள் 848) என்று தெய்வத் திருக்குறள் கூறுமாறு இம்மா நிலத்துளதாம் ஒரு நோயினிருப்புக்கே ஒப்பாகும்.

ஆகவே, நிலையாமையை எண்ணிப் பாராதிருத்தலும் ஆகாது, எந்நேரமும் எண்ணிப் பார்த்திருத்தலும் ஆகாது. அற்றேல், அதனை எண்ணிப் பார்க்க வேண்டுவதெப் போதெனின்; அறிவுங் கல்வியுஞ் செல்வமும் வாய்த்தவர்கள் தாம் பெற்ற அவ்வரிய பேறுகளைப் பயன்படுத்துதலிற் சிறிதுங் காலந்தாழாமைப் பொருட்டு, வாழ்க்கை நிலையாமையினை இடையிடையே தமது நினைவுக்குக் கொணர்தல் வண்டும்.

ஒருவன் மிகச்சிறந்த அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பெற்றது எதற்காக? தன்னிலும் அறிவிற் குறைந்தார்க்குங்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/210&oldid=1585059" இலிருந்து மீள்விக்கப்பட்டது