உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

179

கல்லார்க்கும், பொருளின்றி வறுமைப்பட்டார்க்கும் அவற்றைக்கொண்டு உதவிசெய்தற்காகவன்றோ? ஒருவன் தான்பெற்ற அறிவைப் பிறர்க்குப் பயன்படுத்தாக்கால் அது அவன்றனக்கும் பயன்படாமலே போகின்றது. பிறர்க்குப் பயன்படுத்துகின்ற காலங்களில் மேன்மேல் விளக்கமுடைய தாகிப் பல நுண்ணிய அரும்பொருள்களை அறிந்து பெருகும் அறிவு, அங்ஙனம் பயன்படுத்தப்படாத காலங்களில் தன்னுடைய விளக்கமும் வலியும் இழந்து போகின்றது. அங்ஙனமே ஒருவன் தான்கற்ற கல்வியும் பிறர்க்குப் பயன் படுத்துந்தோறும் ஆழ்ந்துவிரிந்த பெரும் பரப்புடைய தாகும். இனிச் செல்வமுந் தீயவல்லாவழிகளில் அளவறிந்து செலவு செய்யப்படுமாயின், அது முதலிற் குறைவதுபோற் றோன்றினும், பின்னர் ஒன்று, பத்து, நூறு, ஆயிரமாய்ப் பெருகாநிற்கும்; எங்ஙனமென்றாற், பலர்க்கும் பயன்படும் நல்வழிகளில் அளவறிந்து அறிவாய்ப் பொருட்செலவு செய்கின்றவனையும், பிறர் துயர்பொறாமல் உளம் இரங்கி அற்றார்க்கும் அலந்தார்க்கும் அறஞ்செய்கின்றவனையுங், கல்விக்குங் கற்றார்க்கும் ஏராளமாகப் பொருளுதவிபுரிந்து கலையொளி எங்கும் பரவுமாறு செய்கின்றவனையும் நச்சி வந்து எல்லாரும் அவன் வெண்டுமா றெல்லாம் இசைந்து நடப்பராதலால், அவன் முதலிற் செய்யுஞ் செலவு பின்னர் அவற்குப் பெரும் பொருட்டிரளை நல்குவது திண்ணமே யாம். ஆகவே, அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பிறர்க்குப் பயன்படுதலால் மட்டுமே தம்மையுடையானுக்கும் பெரிது பயன்பட்டு என்றும் அழியாது நிலையாய் விளங்கும்; அவை பிறர்க்குப் பயன்படுதல் இல்லாக்கால் தம்மையுடையா னுக்கும் பயன் படுதல் இலவாய் நிலையின்றி அழியும். எத்தனையோ பெரிய அறிவாளிகளுங் கல்வியில் மிக்கா ருஞ் செல்வத்திற் சிறந்தாரும் பண்டைக் காலந் துவங்கி இன்றுகாறுங் கணக்கின்றி வந்தபடியாய்த்தான் இருக் கின்றனர். ஆனால், அவருள் தம் அறிவையுங் கல்வியையுஞ் சல்வத்தையும் பிறர்க்குப் பயன்படுமாறு செய்து வாழ்ந்த வர்களின் பெயரும் புகழுமே ஆங்காங்குக் குன்றின் மேலிட் விளக்குப்போல் எங்கும் மங்காமற் றுலங்குகின்றன. மற்றுப் பயன்படாமல் அவற்றைத் தம்மொடு தாம் வைத்து மாய்ந்த எண்ணிறந்தாரையோ வறும் பெயரளவாய்க் கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/211&oldid=1585067" இலிருந்து மீள்விக்கப்பட்டது