உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

  • மறைமலையம் -18

L

எவருமேயறியார். ஆகவே, பிறர்க்குப் பயன்படாத அறிவு கல்வி சல்வங்கள் நிலையில்லனவாய் மாய்ந்து போதலையும், அவற்றையுடையவரும் அவை தம்மாற்றாமும் நலம் பெறாமல் நீர்மேற் குமிழிபோல் நிலையின்றி மறைந்து போதலையும் டையிடையே நினைந்து பார்த்துப் பயன்பட ஒழுகுதற்கும் அறஞ்செய்தற்கும் முன்நிற்றல் வேண்டும். இவ்வாறு நிலையாமையினை எண்ணிப்பார்ப்பது அறஞ் செய்தற் பொருட்டாகவே யல்லாமல் வேறு எதற்கும் அன்றென்பது நன்கு தெளியப்படும். இது குறித்தன்றோ நாலடியாரிற்,

நி

“புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை- இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்றன் கேள் அலறச் சென்றான் எனப்படுத லான்

என்னும் அறவுரையும் எழுந்தது!

எல்லாங்கடலலை!

இனி, அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பெறுதலினும், பெற்ற அவைதம்மைப் பிறர்க்குப் பயன்படுத்துதலிலும் முனைந்து நிற்பவர்கள், நிலையாமையினைச் சிறிதுமே எண்ணிப்பார்த்த லாகாது. "நாளைக்கு நாம் இறந்தொழிந்தால் நாம் பெறுதற்கு முயலும் அறிவு கல்வி செல்வங்கள் என்னாம்! நமது முயற்சிதான் என்னாம்! நம்மாற் பயன் பெறுவார்தாம் நிலையாக இருப்பவரோ! அவர்பெறும் பயனும் நிலைப்பதோ! எல்லாம் நிலை இல! எல்லாம் பயனில! எல்லாம் மின்னலொளி! எல்லாம் வெளிமினுக்கு! எல்லாம் வீண்முயற்சி! எல்லாம் வெறும் புரட்டு!” என்று அடுத்தடுத்து நினைப்பார்க்கு உள்ளக்கிளர்ச்சி குன்றிவிடும்; தாளாண்மை மாய்ந்து விடும்; உலகமும் உயிரும் பிறவுமெல்லாம் வெறும் பாழய்த்தோன்றும்; அவர் அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பெறார்; பிறர் துயர் கண்டும் அவர் மனமிரங்கார்; பிறர்க் கோருதவியும் புரியார் அவர். ஆதலால், அறிவுங் கல்வியுஞ் செல்வமும் பெற்றுப் பிறர்க்குப் பயன்பட்டு, அதனாற்றாமும் மேன்மேலுயர்ந்து பேரின்பப்பெருக்கிற்படிதற்கான நோக்கத் துடன் மக்களெல்லாரும் இறைவனால் இப்பிறவியில் வரு விக்கப்பட்டிருப்பதனை நன்காழ்ந்துபார்த்து, அவ்வருட் நோக்கத்திற்கிசைந்து நடத்தலில் அனைவருங்

பரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/212&oldid=1585075" இலிருந்து மீள்விக்கப்பட்டது