உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

183

களையும் பயிர் விளைச்சல்களையும் பற்றிப் பேசினர். அதன்பிற் படிப்படியே ஒன்றன்பின்னொன்றாய் வேறு பல வற்றைப் பேசிக்கொண்டே சென்றனர். முடிவில் அவ் வாங்கிலமகன், அம்மடத்தின் அமைப்பைக் குறிப்பாய்ப் பார்த்து, அஃது, அத்தனிமையான சிற்றூரை நோக்க, மிகப் பெரிய தொன்றாயும், அழகியதாயும் அமைக்கப்பட்டிருத்தலை வியந்து பேசினர். அம்மடமானது, மிகச்சிறந்த, வளை வில்லாமல் நிமிர்ந்த தேக்கமரங்களாற் கட்டப்பட்டிருத் தலால், அதனைக் கட்டி முடிப்பதற்கு நீண்டகாலமும் மிகுந்த உழைப்பும் பிடித்திருக்குமென்றும் அவர் எண்ணி னார். ஏனென்றால், அத்தகைய தேக்கமரங்கள் அவ்விடத் திற்கு அருகே எங்குமில்லை. அதனால், அவை மிக எட்டி யுள்ள டங்களிலிருந்து கொணர்ந்து சேர்ப்பிக்கப் பட்டனவா யிருக்கவேண்டுமென அவர் புகன்றனர். அது கேட்ட அவ்விருவரில் தலைமைக்காரன் அம்மடத்தின் வரலாற்றை எடுத்துரைக்கலானான்.

பழைய நாட்களிற் காடு சூழ்ந்த குறிச்சிகளில் அமைக்கப்பட்ட மடங்கள் மூங்கில்களாற் கட்டப்பட்டு மேலே விழல்வேய்ந்து செய்யப்பட்டனவாகும். முன்னொரு கால் அத்தன்மையதாகவே இவ்விடத்தில் இயற்றப்பட்டிருந்த ம மடம் மிகச்சிறிய தொன்றாயுந், தாம் வத்து நடத்தும் பள்ளிக்கூடத்திற்கு ஏற்ற வசதி வாயாததாயும் இருந்தமை கண்டு, அந்நாளில் அதன்கண் இருந்த ஒரு துறவி மனம் புழுங்கி, வலியதாக ஒரு பெரிய மடங்கட்டி முடித்தலைக் கருதி, அதற்காக ஒரு மழைக் காலத்தில் தேக்க நாற்றுக்களை வருவித்து அவற்றை அம்மடத்தைச் சூழ நடுவித்தார். பிறகு அவை தமக்குத் தண்ணீர் பாய்ச்சி, அவைகளைக் கருத்தாய் வளர்த்துவரும் நாட்களில், “இவை பெரியனவாய் வளர்ந்த பிறகு, தகுதியான ஒரு புதிய கட்டிடம் வகுப்பதற்கு இவை பெரிய தேக்க மரங்களாய்ப் பயன்படும். யானே மறுபிறப்பிற் பிறந்து வந்து, அமமரங்களைக்கொண்டு இதனைவிடத் தகுதி வாய்ந்ததொரு திருமடத்தினை இங்கு அமைப்பிப்பேன் என்று அவர் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பது வழக்கம். தேக்கமரங்கள் பேரளவினவாய் வளர்ந்து முற்றுதற்கு நூறாண்டுகள் செல்கின்றன. மற்று, அத்துறவியோ, தாம் நடுவித்த தேக்க

ம்

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/215&oldid=1585101" இலிருந்து மீள்விக்கப்பட்டது