உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

நாற்றுகள்

  • மறைமலையம் -18

இளங்கன்றுகளாயிருக்கும்போதே, இறந்து போயினர். மற்றொரு பௌத்ததுறவி அம்மடத்திற்குத் தலைவராய் வந்தமர்ந்து, அதன்கண் நடைபெற்ற கலைபயில் கழகத்தை நடத்தி வரலானார். இவ்வாறாகக் காலம் போய்க் கொண்டிருந்தது; ஆண்டுகள் செல்லச் செல்லப் புதிய புதிய மடங்கள் மூங்கில்களினாலேயே திரும்பத்திரும்ப அமைக்கப் பட்டு வந்தன; அங்கே நடப்பட்ட தேக்கமரங்களும் வரவரப் பெருத்து வளர்ந்தன. ஆனால், அச்சிற்றூரோ பின்னும் பின்னுஞ் சிறிதாய்க் குறுகியது; ஏனென்றாற், காலஞ் செல்லச்செல்லத் தொல்லையும் மிகுதிப்பட்டது; அவ்வூருங் காட்டினுள்ளே எட்டியிருந்தது. கடைப்படியாக அவ்வூருக்கே ஒரு துறவி இல்லாமற் போயினர். இறுதியாக இருந்த துறவியும் இறந்த பிறகு, வேறொருவரும் அவ்விடத்திற்கு வந்து சேரவில்லை.

ஓர் ஊருக்கு ஒரு துறவி கூட இல்லாதொழிவது பெரிய தொரு குறைபாடாகும். அங்குள்ள இளஞ்சிறார் எழுதப் படிக்கக் கணக்குச் செய்யக் கற்பிப்பார் எவரும் இல்லை. ஐயம் இட்டு அதனாற் பெறும்பேற்றை எய்துதற்கும் அங்கு ஐயம் ஏற்பார் எவரும் இல்லை. உயிர்க்குறுதியான புனித உரைகளை எடுத்து அறிவுறுத்துதற்கும் பெரியாரெவரும் அங்கில்லை யாயினர்! ஆகவே, அவ்வூரின் நிலைமை பழுதான தொன்றாய்த் திரிபுற்றது.

பிறகு சிறிதுகாலங் கழித்து ஒருநாட் சாய்ங்காலத்தில், அவ்வூர்ச் சிறுமிகள் அங்குள்ளதொரு கிணற்றில் நீர் முகந்து கொண்டிருக்கையில், அவ்வடவியினுள்ளிருந்து ஒரு துறவி நெடுவழி வந்தமையால் அடிகள் புண்பட்டுக் களைத்துப் பசியுடன் அங்கு வந்த சேர்ந்தனர். உடனே அவ்வூரவர் அவரை மிகுகளிப்புடன் வரவேற்றனராயினும், அவர் அவ்வழியே வேறோர் ஊர்க்குச் செல்பவராயிருக்கலாமென மனம் வெதும்பி, அவர் அன்றிரவு தங்கித் துயில்கொள்ளுதற் பொருட்டு அப்பழைய மடத்தைப் பரபரப்புடன் துடைத்துத் துப்புரவு செய்தனர். ஆனாற், புதுமை என்னென்றால், வந்த அத்துறவி அவ்விடமெல்லாம் அறிந்து பழக்கப்பட்டவர் போற் காணப்பட்டார். அவர் அம்மடத்தையும் அதற்குச் செல்லும் வழியையும், அடுத்துள்ள ஊர்க்குச் செல்லும் பாதைகளையும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/216&oldid=1585109" இலிருந்து மீள்விக்கப்பட்டது