உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

185

அங்குள்ள குன்றுகள், ஆண்டு ஓடும் நீரோட்டங்களின் பெயர்களையும் நன்கறிந்தவராயிருந்தனர். அதனால், அவர் முன்னோரு கால் அவ்வூரில் உறைந்தவராயிருக்க வேண்டு மென்பது அவ்வூரினர் எல்லார் உள்ளத்திலும் பட்டது. என்றாலும், அங்குள்ளாரெவரும் அவரை அறிந்தவராயும் இல்லை. அவரது முகம் அறியப்பட்ட தொன்றாயுமில்லை. அவர் ஆண்டில் இளைஞராயும், அவ்வூரிற் சிலர் எழுபதாண்டு யிர்வாழ்ந்தவராயும் இருந்தனர்.

மறுநாட் காலையில், அத்துறவி அவ்விடத்தைவிட்டு வழிச்செல்பவராயில்லாமல், ஐயம் ஏற்குங் கடிஞை ஏந்தி, ர்க்குட்புகுந்து, பௌத்த துறவிகள் ஐயம் ஏற்கும் முறைப்படியே, தெருக்கடோறுஞ் சுற்றிவந்து, அன்றைக்கு வேண்டும் உணவைத் தொகுத்துக்கொண்டார். அன்றை அவ்வூரினரெல்லாரும்

மாலைப்பொழுதில்,

அவரை

அம்மடத்திற் காணவந்தபோது, அவர் தாம் அங்கேயே பதிவா யிருக்கப்போவதைச் சொல்லிப் பிறகு, அம்மடத்தைச்சூழ அத்தேக்கமரங்களை அங்கே நடுவித்த துறவியைப் பற்றியும், அம்மரங்கள் வளர்ந்து முற்றிய பின் அத்துறவி திரும்பி வருவதாகக் கூறிய அறுதி யுரையைப்பற்றியும் அவர்கட்கு நினைவுறுத்தினர். அதன்பின் அவ்விளந்துறவியார் அவர்களை நோக்கி, “யானே இம்மரங்களை இங்கு நடுவித்தவன். இதோ! இவை வை வளர்ந்துவிட்டன; யானுந் திரும்பி வந்துவிட்டேன்; யான் முன் மொழிந்தது போலவே, இப்போது ஒரு திருமடத்தைக் கட்டுவாமாக!” என விளம்பினர்.

.

அவ்வூரவர் அவர் கூறியதில் ஐயுற்றுப் பற்பல கேள்விகளைக் கேட்டனர்; ஆண்டில் முதிர்ந்தோர் நெடுங் காலத்திற்கு முன் வழங்கிய செய்திகளைப்பற்றி அவர்பால் உரையாடினர்; அவைகளையெல்லாம் அவர் அறிந்தவர் போல் அவர்கட்கு விடைகொடுத்தனர். இன்னுந், தாம் தெற்கே நெடுந்தொலைவிற் பிறந்து கல்வி பயிற்றப்பட்டதையுந், தாம் இன்னாரென்றே அறியாமல் வளர்ந்ததையும், பிறகு தாம் ஒரு திருமடத்திற்சேர்ந்து ‘பொங்கி’2 ஆனதையும், பிறகு ஒருநாள் தாம் கனவு காண்கையில், தாம் தேக்க மரங்கள் நடுவித்ததும் அக்கானகத்திற் சேயதாயுள்ள அச் சிற்றூருக்குத் திரும்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/217&oldid=1585117" இலிருந்து மீள்விக்கப்பட்டது