உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

.

மறைமலையம் 18

வருவதாகக் கூறிய உறுதிமொழியுந்தம் நினைவுக்கு வந்ததையும் எடுத்துரைத்தார். அங்ஙனங் கனவுகண்ட மறுநாளே தாம் இருந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப் பல நாட்களும் பல கிழமைகளுமாகத் தாம் அவ்வூர்க்கு அவர்கள் கண்ணெதிரே வந்து சேர்ந்ததுந் தெரிவித்தார். வியக்கத்தக்க வரலாற்றைக் கேட்ட அவ்வூரினர் அவர் கூறிய அதில் நம்பிக்கையுற்று, அப்பருத்த தேக்கமரங்களை வெட்டி வீழ்த்தி, இப்போது காணப்படும் அப்பெரிய திருமடத்தைக் கட்டி முடித்தனரென்பது.

66

அவ்

இன்னும், இளஞ்சிறார் பலர் தம் முற்பிறவி நிகழ்ச்சி களை நினைவு கூர்ந்துரைக்கின்றனரெனவும், அவர்கள் வளர வளர அந்நினைவு மறைந்துபோதலின் அவர்களவற்றையும் மறந்துபோகின்றனரெனவும், ஆனால், அவர்கள் சிறுவரா யிருக்கும் வரையில் அந்நினைவு அவர்கள் பாற்றெளிவாகவே விளங்குகின்றதெனவும் பர்மியர் கூறுகின்றனர். யானே அத்தகைய நினைவு வாய்ந்த பிள்ளைகளைப் பார்த்திருக் கின்றேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ‘ஒக்க்ஷித்கான்' என்னும் ஒரு சிற்றூரில், ஓர் ஆண்மகவும் ஒரு பெண்மகவும், பக்கத்துப் பக்கத்து வீட்டில் ஒரே நாளிற்பிறந்தன. அவையொன்றாய் வளர்ந்து, ஒன்றாய் விளையாடி, ஒன்றையொன்று காதலித்தன. பிறகு பருவ முதிர்ந்து இளைஞரானபின், அவ்விளைஞனும் இளைய மாதும் மணஞ்செய்துகொண்டு, அவ்வூரையடுத்துள்ள வறண்ட பாழ்நிலங்களைத் திருத்திப் பயிர்செய்து, அவற்றிற் கிடைத்த த்த விளைவால் தமது இல்லற வாழ்க்கையை இனிது நடாத்திவரலாயினர். அவர்கள் ஒருவரையொருவர் பிரிந்து உயிர்வாழ மாட்டாத அத்துணைப் பெருங் காதற்கிழமை யுடை யராயிருந்தன ரென்பதும், அதனால் வாழ்நாள் முடிந்து உயிர் துறந்த காலத்தும் ஒன்றாகவே உயிர்துறந்தனரென்பதும் அங்குள்ளாரெல்லாரும் நன்கறிந்தனவாகும். அவர்களி வரும் ஒரே நாளில் இறந்தமையால், ஊர்க்குப் புறத்தே யுள்ள இடுகாட்டில் அவர்களைப் புதைத்து விட்டார்கள். அவர்களைப் பற்றிய நினைவுங் காலஞ் செல்லச் செல்ல அவ்வூரார்க்கு இல்லாமல் மறைந்துபோயிற்று. ஏனென்றாற், காலத்தின் வல்லமை பெரிதன்றோ?

ரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/218&oldid=1585126" இலிருந்து மீள்விக்கப்பட்டது