உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மறைமலையம் -18

பார்த்தபோது. அவை முற்பிறவியில் தனக்குரியவாய் இருந்த தனைத் தெரிந்து கொண்ட ாள். வள் அப்பாவை ஒவ்வொன்றன் பெயரையும், அவையிற்றை ஆட்டுங்கால் தான் பேசுஞ் சொற்கள் சிலவற்றையுங்கூடச் செவ்வனே நினைவு கூர்ந்தாள். மேலும் அவள் எனக்குச்சொன்னவை இவை: ‘யான் முற்பிறவியில் நான்கு முறை மணஞ் செய்துகொண்டேன். என் மனைவிமார் நால்வருள் இருவர் இறந்துபோயினர். மூன்றாம் மனைவியை விலக்கி விட்டேன். நான்காம் மனைவி யான் இறக்குங்கால் உயிரோடிருந்தனள்; இப்போதும் உயிரோடிருக் கின்றனள்; இவளை யான் மிகவுங் காதலித்தேன். யான் விலக்கிவிட்ட மூன்றாம் மனைவியோ மிகவுங் கொடியவள்; இதோ பாருங்கள் (என்று தன் தோளின்மீதிருந்த தழும்பைக் காட்டி) எங்கட்குள் நேர்ந்த சண்டையில் அவள் எனக்குத் தந்தது இது! அவள் ஒரு கத்தியை யெடுத்து இவ்வாறு எனக்குக் காயத்தை உண்டாக்கினாள்; அதன் பிறகுதான் யான் அவளை விலக்கிவிட்டேன். அவள் மிகக்கொடிய குணம் உள்ளவள்

ஒரு

"இங்ஙனமாக இச்சிறுமி உரையாடியது எனக்குப் பெரிதும் புதுமையாய்த் தோன்றியது. இவள் காட்டிய இத் தழும்பு பிறவியிலேயே அமைந்த அடையாளமாகும். என்றாலும், அச்சண்டையில் அவன் மனையாள்

உண்

L ாக்கின காயம் பட்ட அதே இடத்திலேயே இச்சிறுமி காட்டிய வடு அமைந்த உண்மை எனக்கு அங்குள்ளாரால் உறுதிப் படுத்தப்பட்டது.

L

"நீக்கப்பட்ட மனைவியுங், காதலிக்கப்பட்ட மனைவி யும் இன்னும் உயிரோடிருக்கின்றனர்; அவர்கள் ஆண்டில் இன் ன்னும் முதிரவில்லை. காதலிக்கப்பட்ட நான்காம் மனைவியானவள், ச்சிறு பண்ணைத் தன்னுடன் வந்திருக்கும்படி விரும்பினள். ஆனால், அவள்அதற்கிசைந்து அவள்பாற் செல்லவில்லை. அதன்மேல் யான் அச்சிறுமியை நோக்கி ‘நீ அந்த அம்மையை நிரம்பவுங் காதலித்தா யென்பது உனக்கே தெரியும். அந்த அம்மையும் உனக்கு நல்ல மனையாளாய் இருந்தவர். அவ்வாறாயின், நீ அவருடன் இருந்து வாழ விரும்ப வேண்டுமே என வினவினேன். அதற்கு அச்சிறுமி ‘அவை எல்லாம் முற்பிறவியில் நடந்தவை' என்றனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/222&oldid=1585159" இலிருந்து மீள்விக்கப்பட்டது