உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

191

இப்போது அச்சிறுமி தன் பெற்றோரிடத்திலேயே அன்பு மிக்கவளாயிருக்கின்றாள். சென்ற பிறவியின் நினைவு அவட்கொரு கனவாய்த் தோன்றியது அதுவுந் தொடர்பு பட்டுத் தோன்றாமல், துண்டு துண்டாய் இன்னுந் தோன்றுவதாயிற்று. ஆனால், முற்பிறவியிற் காணப்பட்ட பகைமையும் அன்பும் மனக்கொதிப்பும் உழப்பு மெல்லாம் அடியோடு அவிந்துபோயின.”

"இன்னும் ஒரு சிறு பையன் தனக்குத் தன் முற்பிறவி நிகழ்ச்சி நினைவுக்கு வந்தவரலாற்றினைப் பின்வருமாறு எனக் கெடுத்துக் கூறினன். பௌத்த மடங்களில் திருவிழக் கொண் L ாடுங் காலங்களில், ஒரு துறவியிருக்கும் இடத்திற்கும் மற்றொரு துறவி யிருக்கும் இடத்திற்கும் இடையிடையே திரைகளிடுவது வழக்கம். அங்ஙனம் இடப்படுந் திரைகளிற் சில, இப்பையன் முற்பிறவியில் அணிந்திருந்த பட்டுத் துணிகளைக் கொண்டு தைக்கப்பட்டிருந்தன. இனி, ஒரு செல்வன்றன் மகனான ஒரு சிறுவன் பௌத்த மதத்தின் துறவியாகச் செய்யப்படுந் திருநாள் ஒன்று ஒரு திருமடத்திற் கொண்டாடப் பட்டது. மேற் கூறிய பையன்றன் பெற்றோர்கள் தம் பையன் மூன்றாண்டுள்ள சிறுவனாயிருந்தபோது, அவனை அழைத்துக் கொண்டு அத்திருநாளுக்குச் சென்றனர். அவன் அது நடைபெறுந் திருமடத்திற்குச் சன்றதும், அங்கே தொங்கவிடப்பட்டிருக்குந் திரைகள் சில தான் முற்பிறவியில் அணிந்திருந்த பட்டுத்துணிகளைக்கொண்டு சய்யப் பட்டிருத்தலைக் கண்டனன்; கண்டவுடனே. அவனுக்குத் தனது முற்பிறவியின் நிகழ்ச்சி நினைவுக்கு வந்துவிட்டது. அவனும் அதனைக் குறிப்பிட்டுக் காட்டினன்.'

""

“இச்சிறுவன் தான் முன்னே இறந்துபட்டதும், மூன்று திங்கள்வரையில் மற்றொரு பிறவிக்கு வராமல் தான் துன்புற்றதும் எனக்கு எடுத்துரைத்தான். இஃது எதனால் நேர்ந்ததென்றால், அவன் தற்செயலாக இரு கோழியைக் கொன்றதனால் நேர்ந்ததாகும். அவன் வேண்டுமென்றே அதனைக் கொன்றிருந்தனனாயின், இன்னுங் கடுமையாக அவன் ஒறுக்கப்பட்டிருப்பனாம், இந்த மூன்று திங்களிற் பெரும்பாலும் அவன் ஒரு தேங்காய்ச் சிரட்டைக் குடைவி லேயே யிருந்தமையாலும், அச்சிரட்டை மாட்டுக்காரப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/223&oldid=1585168" இலிருந்து மீள்விக்கப்பட்டது