உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் -18

என்னுந் திருக்குறளுரையாலும் நன்கு விளங்குகின்றதன்றோ? கல்வியுந் தவமும் நன்முயற்சியும் வாயாத கீழ் மக்கள் தம்மை உயர்குலத்தவராகவும், அம்மூன்றும் வாய்ந்த மேன்மக்களை இழிகுலத்தவராகவும், பிழைபடக் கருதியுஞ் செருக்கிக் கூறியுந், தாம் உள்ளீடில்லாப் பதராதலைக் காட்டுதலுடன், மேன்மக்கள் செய்யும் நன்முயற்சிகளைப் பயனிலவாக்குதற்கும் மடிகட்டி நிற்கின்றனர். அன்னவரை நோக்கியன்றோ நாலடியார், “நல்ல குலமென்றுந் தீய குலமென்றுஞ்

சொல்லள வல்லாற் பொருளில்லை - தொல்சிறப்பின் ஒண்பொரு ளொன்றோ தவங்கல்வி யாள்வினை என்றிவற்றான் ஆகுங் குலம்”

என்று நுவலுவதாயிற்று? ஆர்க்குரையரை அவர் பிறந்த குலம்பற்றியும், அவர் முதலிற் செய்து போந்த சிரைத்தற் றொழில்பற்றியும் இழித்துப் பேசியவர்களே, அவர் அரிதின் ஆக்கிய நூற்பொறியாற் சீருஞ் செல்வமும் பெற்றபின், அவரையே தமதூருக்கு நாட்டாண்மைக்கார ராக்கி உயர்த்தி வைத்தனர்கள். நன்முயற்சி யுடைய உண்மையாளர் பக்கமே ய இறைவன் நிற்றலால், அவர்க்குப் பகைவராய் நிற்பார் செய்யுந் தீங்குகள் அவரை அணுகாமலே விலகி ஒழிகின்றன. ஆதலால், அறிவும் உழைப்பும் விடாமுயற்சியும் உடைய ராய்த் தமக்கும் பிறர்க்கும் பயன்பட வாழ்தலே மக்கட்பிறவி யெடுத்தாரெல்லார்க்கும் உரிய இன்றியமையா ஒழுகலாறா

மென்று தெளிந்துகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/242&oldid=1585327" இலிருந்து மீள்விக்கப்பட்டது