உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

209

சிறிதுகாலத்திலெல்லாம் நூல்வாணிகம் முழுதும் இவரது ஆட்சிக்கே உட்படலாயிற்று. ஏனை நூல் வணிகர் தொழில் முற்றும் இவரது ஆட்சிக்கீழ் வந்தமையால், இவரே சரக்கு களின் விலையை ஒருநிலையில் வைத்து உறுதிப்படுத்தினர்.

இவ்வாறாக ஆர்க்குரையர் தமக்கு நேர்ந்த பல அல்லல் களின் இடையிலுஞ் சிறிதும் உளங்கலங்காதவராய்த், தாம் மேற்கொண்டதொரு சிறந்த முயற்சியிலேயே உறைத்து நின்றமையால், இவர் அவ்விடர்களை யெல்லாம் புறங் கண்டு, தமதரிய முயற்சியின் பயனை நன்கு பெறலானார். முதன் முதற்றாம் ஆக்கிய நூற்பொறிக்குப்பின் பதினெட் L டாண்டுகள் கழித்துத், ‘தெரிபி' மாகாணத்திலுள்ளாரால் இவர் பெரிதும் நன்கு மதிக்கப்பட்டு, இவர் அவ்வூர்க்கு நாட்டாண்மைக் காரராகவும் ஏற்படுத்தப்பட்டனர். அதற்குப் பிற் சிலநாளில் மூன்றாஞ் ‘சியார்ச்சு’ மன்னர் இவர்க்கு ‘நைட்’ என்னுஞ் சிறந்த பட்டமும் வழங்கி இவர்க்குப் பெருஞ்சிறப்புச் செய்தனரென்பது.

உலகத்திற்குப் பெரும்பயன்றரும் ஒருசிறந்த முயற்சி யினைத் துவங்கி அதனை முடித்துப் பயன்படுத்துவ திற்றலை யிட்ட மேலோர்கள், தாம் பிறந்த குடி எவ்வளவு இழிந்ததும் ஏழ்மையுடையதுமாயிருப்பினுந், தம்முடைய பிறப்பின் இழிபும் எளிமையும் நோக்கிக் கல்லாக் கசடர்களுங் கற்றும் மெய்யறிவு பெறாதவர்களும் அவரை எவ்வளவுதான் இழித்துரைப்பினுந் தாம் எடுத்த நன் முயற்சி நன்கு முடியாவாறு அக்கயவர்கள் அவர்க்கு எவ்வளவுதான் தீங்கிழைப்பினும் அவர் தாமெடுத்த முயற்சியைச் சிறிதுஞ் சோர்ந்துவிடாராய் அதனை எங்ஙன மாயினும் நன்கு முடித்துத், தமக்கு இன்னாசெய்தாரும் அதனால் இனிதுபெற்று மகிழ்ந்திடப்புரிகுவர், என்னும் இவ்வுண்மையினை ஆர்க்குரையரின் வாழ்க்கை வரலாறு நன்கு விளக்குதல் காண்க. செயற்கரிய செய்வரே பெரியர், அது செயமாட்டாதவரே சிறியர் என்பது,

"செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார்”

(குறள் 26)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/241&oldid=1585319" இலிருந்து மீள்விக்கப்பட்டது