உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மறைமலையம் 18

கிடமின்றி மனவயர்ச்சியினை உண்டாக்கியதன்றியும், அது தன் செலவுக்காக ஏராளமான பொருளையும் விழுங்கி வரலாயிற்று.

.

இவ்வாறு சில ஆண்டுகள் கடந்தபின், நன்மையுண்டாகி வருந்தறுவாயில், இலங்காமாகாணத்துக் கைந்நெசவுகாரர்கள், ஆர்க்குரையரது உரிமை நூற்பொறியை வலிந்து கைப்பற்றி உடைத்தெறிந்தனர். ஆர்க்குரையர் தொழிலாளிகட்குப் பகைஞர் என்றும் ஆங்காங்கு ஏசப்பட்டார். சோர்லி என்னும் ஊருக்கு அருகாமையில் இவர் அமைப்பித்த பஞ்சாலை யினையும் அவ்வூர்க் கலகக்காரர்கள் இடித்தழித்தனர்; ஊர்காவற்காரர்களும் படைஞரும் அதனைத் தடுக்க எவ்வளவோ முயன்றும் பயன்படவில்லை. ஆர்க்குரையரின் பஞ்சாலையிற் செய்யப்பட்டு வெளிவந்த சரக்குகள், ஏனையோர் கொணர்ந்து விற்ற சரக்குள் எல்லாவற்றினும் மிகச் சிறந்தனவாயிருந்தும், இலங்கா ஊரார் அவைதம்மை வாங்காமல் மறுத்துவிட்டனர். அதன்மேலும், இவருடைய பொறிகளுக்கு உரிமை கொடுப்பதனையும் அவ்வூரவர் மறுத்து விட்டதுடன் இவரை அறமன்றத்திற்கு இழுத்து நசுக்கி விடவுந் துணிந்தனர். செம்மையுள்ளம் வாய்ந்தாரனைவரும் அருவருக்குமாறு இவரது வரது உரிமையினையும் அவர்கள் கவிழ்த்துவிட்டனர். வழக்குமுடிந்து இவர் தம் எதிரிகள் தங்கியிருந்த உணவுவிடுதி யோரமாய்ச் செல்கையில், அவர்களுள் ஒருவன் இவரது செவியிற்கேட்கும்படி "கடைசியாக நாம் பழைய அம்பட்டனைத் தொலைத்துவிட்டோம்” என உரக்கச் சொல்லினன்; அதற்கிவர் பொறுமையாய், “அதைப்பற்றிக் கவலையில்லை; ன்னும் என்னிடஞ் ஞ் சிரைக்குங்கத்தி மிச்சமாய் இருக்கின்றது; அது கொண்டு நுங்களெல்லாரை யுஞ் சிரைத்துவிடுவேன்” என மறுமொழி தந்தனர்.

இசு

பின்னர்ச் சிறிது காலத்தில் இவர் இலங்காவூர் முதற் பல இடங்களிற் புதிய பஞ்சாலைகள் அமைத்தனர். ருதருடன்கொண்ட கூட்டுத் தீர்ந்தபின் இருவருஞ் சேர்ந்து நடத்திய பஞ்சாலைகளும் இவருடைய கைக்குவந்தன. வருடைய பஞ்சாலைகளிலிருந்து போந்த சரக்குகள் தொகையிலுந் தன்மையிலும் விழுமியவாயிருந்தமையாற்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/240&oldid=1585310" இலிருந்து மீள்விக்கப்பட்டது