உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

207

நூனாழிப் பொறி அமைத்த 'கே' என்பவரும், இராட்டினம் ஒன்றமைத்த எளிய ‘ஆர்கிரிவரும்' தாம் ஆக்கிய அப் பொறிகளைப் பலர்க்குங் காட்டப் போன ஊர்களில் அவ்வூர்க் கலகக்காரரால், அவருடைய பொறிகள் உடைத்தெறியப் பட்டன. அந்நிகழச்சி களை நினைவு கூர்ந்த ஆர்க்குரையர் னி இவ்வூரிற் றங்குவது தொல்லைக் கிடமாகுமென அஞ்சித், தமது பொறியை யெடுத்துக்கொண்டு அத்தகைய துன்பத்திற்கு அஞ்ச வேண்டுவதில்லாத 'நாட்டிங்காம்' என்னும் நகருக்குப் போயினர்.

அங்கே சில நாள் வைகித், தமக்குப் பொருளுதவி செய்து, தமது நூற்பொறியைப் பயன்படுத்தத் தக்காரை இவர் நாடுகையில், அந்நகரில் மிக்க புகழ்உடைய ஒரு தொழில் நிலையத்தின் தலைவரும் பொறிகள் அமைப்பதிற்றிறமை வாய்ந்தவரும் ஆன இசுருதர்' (Strutt) என்பார் தமக்கு நண்பராகப்பெற்றார். இசுருதர் இவர் ஆக்கிய நூற்பொறியின் அமைப்பினைக் கண்டு மிகவும் வியந்து, தம்மொடு கூட் டாகச் சேர்ந்து நூற்குந்தொழில் நடாத்தும்படி இவரோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். அதுமுதல் இவர்க்கு நல்லகாலம் பிறந்தது. 1769 ஆம் ஆண்டில் ஆர்க்குரையர் பெயரினாலேயே அந்நூற்பொறிக் குரிமை வாங்கப்பட்டது . அதே ஆண்டில் 'ஜெம்ஸ்வாட்' என்பவர் புதிதுகண்டமைத்த 'நீராவிப்பொறி'க்கு உரிமை வாங்கப்பட்ட நிகழ்ச்சியும் ஒத்துக்கொண்டமை பெரிதும் இறும்பூது பயப்பதாயிருக் கின்றது. அதன்பின், அந் நாட்டிங்காம் ஊரிலேதான் முதன்முதல் ஒரு பஞ்சாலை நிறுவப்பட்டது.

.

இவ்வளவிலே ஆர்க்குரையரின் பாடு முடிந்ததென்று சொல்லுதற்கிடமில்லை. தாம் இயற்றிய நூற்பொறி இயங்குங்கால் அதில் இவர் இன்னும் பல சீர்திருத்தங்கள் செய்யவேண்டியவரானார். ஓயாமல் அதிற் பல மாறுதல் களுந் திருத்தங்களுந் செய்தபடியாகவே யிருந்தார். அங் ஙனமெல்லாம் இவர் அதனைச் செப்பஞ்செய்து கொண்டு வந்த பின்னர்த்தான் அது செவ்வனேயியங்கிப் பயன் தருவ தாயிற்று. இவ்வாறு அது செவ்வனே நடைபெறலான பின்னுஞ், சில ஆண்டுகள் வரையில் தன்னால் வருவாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/239&oldid=1585302" இலிருந்து மீள்விக்கப்பட்டது