உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

  • மறைமலையம் -18

தொலைத்துவிட்டனர்; கொடிய வறுமையும் இவரை வந்து பற்றி நலிவதாயிற்று. இத்தறுவாயில் இவர்க்கு மணமாகி யிருந்தது. இவர் தம் மனைவி, இவர் தம்முடைய காலத்தையுங் காசையும் வேண்டுமென்றே பாழாக்குவதாகக் கருதி மனம் பொறாதவளாய், ஒருநாள் தனக்குத் திடுமெனத் தோன்றிய மிக்க சினத்தால், தனது குடும்பத்திற்கு வந்த வறுமையின் காரணத்தைப் போக்குவாள் போல், இவர் வர் உரு ருவாக்கி வைத்திருந்த மூலப்பொறிகளையெல்லாம் வலிந்தெடுத்து உடைத்தெறிந்தாள். ஆர்க்குரையரோ தாம் மேற்கொண்ட தோர் அருமுயற்சியில் விடாப்பிடியும் மனக்கிளர்ச்சியும் வாய்ந்தவர்; ஆகவே இவர் தம் மனைவி செய்த இவ்வ செயலைக் கண்டு அளவுக்குமிஞ்சிய மனநோக்காடுடைய ராய், உடனே அவளைவிட்டுப் பிரிந்துபோயினர்.

வ்வடாச்

பிறகு, அயலூர்களில் இவர் செல்கையில், 'வாரிங்கதன் (றுயசசேைபவடி)ே என்னும் ஊரில் நாழிகைவட்டில் (கடிகாரம்) செய்வாரான 'கே' எனப் பெயரிய ஒருவரோடு இவர் பழக்க மானார். அவர், இவர் ஆக்கிய 'ஓவா இயக்கப் பொறி' யின் சில பகுதிகளைச் செய்வதற்கு உதவி புரிந்தார். ஆர்க்குரையர் சிகழிகை விற்குந் தொழிலை அறவே கை விட்டுத், தாஞ்சமைத்தற்குப் புகுந்த நூற்பொறியை முற்றுந் திருத்தமாகச் செய்து முடித்தலிலேயே கருத்தொருப்பட்டு நின்றார். அதனை முடித்த பின், அதன் முதற்படியினை இவர் சொல்லிக் காட்டிய வண்ணமே 'கே' என்பவர் செவ்வனே செய்தமைத்தார். அங்ஙனம் அமைத்த அப்பொறியைப், பிரத்தன்மா நகரின் கண்ணதான இலக்கண அறச்சாலையின் கூடத்திற் கொண்டு போய் வைத்தார். இவர் தமக்குள்ள வறுமையாற் கந்தையாய்ப் போன உடைகளை உடுத்திருத்தல் கண்ட அவ்வூரவர் சிலர் தாம் ஒருங்குசேர்ந்துதவிய பொருளாற் புதிய உடை செய்து

அவரை உடுப்பித்தனர். அதன்பிறகே இவர் தமது பொறியினைக் காட்டுங் கூடத்திற்குச் சென்றனர். ஆனாற், கையால் நூல் நூற்றுப் பிழைக்குந் தொழிலாளிகள் நிறைந்த அந் நகரத்தில் இவர் தமது நூற்பொறியைக் காணர்ந்து காட்டுவது இடர் விளைப்பதொன்றாய்த் தோன்றியது. அவ்வறப்பள்ளிக் கூடத்துக்கு வெளியிலே அத்தொழிலாளிகள்

டை யிடையே உறுமும் ஒலி கேட்டது. இதற்குமுன் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/238&oldid=1585294" இலிருந்து மீள்விக்கப்பட்டது