உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

205

இவ்வாறு சில ஆண்டுகள் கழித்த பின், அவர் அந் நிலவறையை விட்டுத், தெருத் தெருவாய்த் திரிந்து மயிர் விற்பனைசெய்யுந் தொழிலை மேற்கொண்டார். அந்நாளில் மேல் நாட்டவர் தந் தலைக்குப் பொய்ம்மயிர் வைத்துப் புனைந்துகொள்வது வழக்கம். அதனால், அஞ்ஞான்றை மயிர் வினைஞர் அத்தகைய பொய்ம்மயிர் முடிகள் செய்து விற்குந் தாழிலை மிகுதியாய் மேற்கொண்டிருந்தனர். ஆகவே, ர்க்குரையரும் அம்முடிகளின் பொருட்டுத் தலைமயிர் வாங்கி விற்றுவந்தார். இலங்கா ஊரிற் கூடுஞ் சந்தைகளில், தங் கூந்தலை நீளப்பின்னி விடுதற்காகத் தலைமயிர் வாங்கவரும் மகளிர்க்கு இவர் மயிர் விற்பனை செய்ததில் நல்ல ஊதியத்தை அடைந்தார். அதுவல்லாமலும், இவர் ஒரு சிறந்த மயிர்ச்சாயஞ் செய்து திறமையாக விற்றதிலிருந்தும் மிக்க ஊதியத்தைப் பெற்றார். இங்ஙனமெல்லாம் இத்துறையில் இவர் சுருசுருப்பாக முயன்றும், இவரது வாழ்நாட் செலவுக்குமேல் மிகுதியாய் வேறேதுங் கிடைத்திலது.

பின்னர்ச் சில ஆண்டுகளிலெல்லாம், பொய்ம்மயிர் புனையும் நடையும் மாறிவிடலாயிற்று. அதனாற், பொய்ம்மயிர் வினைஞ ரெல்லாரும் பெரிதும் இடருழக்கலானார்கள். ஆயினும், ஆர்க்குரையர் தமது முயற்சியை அத்துறையினின்றுந் திருப்பித், தமக்கு இயற்கையாய் வாய்ந்த பொறியமைக்கும் வழியிற் செலுத்தத் துவங்கினார். அஞ்ஞான்று, நூல்நூற்கும் பொறியொன்று அமைப்பதற்குப் பலர் பலவாறு முயன்று கொண்டிருந்தனர். அது கண்ட ஆர்க்குரையர் தாமும் அத் துறையில் இறங்கினார். தாமாகவே கலையறிவிற் றேர்ச்சி பற்ற மற்றைப் மற்றைப் பெரியாரைப்போல், இவரும் முன்னமே தமக்குக் கிடைத்த ஒழிவு நேரங்களில் எப்போழுதும் இயங்க வல்லதான ஒரு பொறியைப் புதிது செய்வதிற் றமது கருத்தைச் செலுத்திவந்தனர்; அம்முயற்சியிலிருந்து நூற்கும் பொறி யினை ஆக்குவது அவர்க்கு எளிதில் வந்து கைகூடிற்று.

அங்ஙனம் அதனை ஆக்கும் ஆராய்ச்சியிலேயேஇவர் தமது கருத்தை முழுவதும் ஈடுபடுத்தியிருந்தமையால், தமக்கு வழக்கமாயுள்ள தொழிலையும் பாராமுகஞ்செய்தனர். அதனாற், சிறிது மிச்சம்பிடித்து வைத்திருந்த பணத்தையுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/237&oldid=1585285" இலிருந்து மீள்விக்கப்பட்டது