உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

  • மறைமலையம் -18

.

பயனைஉலகிற்குவிளைத்த வியத்தகு சிறப்புவாய்ந்ததாகும். இதனை ஓவாது அறியமுயன்று கண்டுபிடித்த மேலோர் ஆர்க்குரையர் (Arkwright) என்னும் பெயரினராவர். இவர்க்கு முப்பதாண்டுகளுக்கு முன்னேயிருந்த வேறு இருவர் நூற்கும் பொறிகளை வருந்தியமைத்தன ராயினும், அவை முற்றும் திருத்தமாக அமைக்கப்படாமையால் அவை தொழிற் படுத்தப்பட்டக்காற் செவ்வனே இயங்காமல் வீணாய்ப் போயின. மற்று, ஆர்க்குரையரோ தமக்கு முனனேயிருந்தார் கண்டுபிடித்தவைகளில் இருந்த குறைபாடுகளையெல்லாம் நீக்கி, மிகவுந் திருத்தமானதொரு முறையிற் றாமே புதுவதாக ஒரு 'நூற்பொறி' யினைச் செய்துமுடித்தார்.

ஆர்க்குரையர், பெரும்பாலும் ஏனைப் பெரியாரைப் போற், றாழ்ந்தகுடியிற்றோன்றியவர். இவர் கி. பி. 1732-ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் கண்ணதான ‘பிரத்தன்’ (ஞசநளவடி)ே என்னுந் துறைமுகப்பட்டினத்திற் பிறந்தார். இவர் தம் பெற்றோர்களோ மிகவும் ஏழ்மையான நிலையிலிருந் தார்கள். அவர்கட்குப் பிறந்த பதின்மூன்று பிள்ளைகளுள் இவர் கடைசிப்பிள்ளையாவர். இவர் பள்ளிக்கூடத்திற் சன்று கல்வி பயின்றதேயில்லை; இவர் கற்றுக் கொண்ட தெல்லாம் இவர் தாமாகவே முயன்று கற்றதொரு சிறு கல்வியாகும்; தமது முடிவு காலம்வரையில் மிகவுந் தொல்லைப்பட்டே

இவர் ஏதும் எழுதக்கூடியவராய் இருந்தனர். இவர் சிறுபிள்ளையாயிருந்தஞான்று, ஓர் அம்பட்டனிடத்தில் தொழில் கற்றுக்கொள்ளுமாறு விடப் பட்டார். அதனை நன்கு கற்றறிந்தபின், 'பொலுத்தான்' என்னும் ஊரில் தாம் அத்தொழிலை நடத்துதற்குச் சென்று, நிலத்தின் கீழ் உள்ளதோர் அறையைக் குடிக்கூலிக்கெடுத்து, அதன்மேல் “நிலத்தின் கீழ் அம்பட்டனிடம் வாருங்கள், அவன் ஒரு பணத்திற்குச் சிரைக்கின்றான்” எனப் பலகையும் எழுதிக் கட்டிவிட்டார். அதனால், மற்றை அம்பட்டர்க்கு வருவாய் சுருங்கவே, அவர்களுந் தமது சிரைப்புக்கூலியை அந்த அளவுக்கே குறைக்கவேண்டியவரானார்கள். அதுகண்ட ஆர்க்குரையர் தமது தொழில் நன்கு நடைபெறல் வேண்டி, “அரைப் பணத்திற்கு இங்கே திருத்தமான சிரைப்பு” எனப் பலகை எழுதிக் கட்டினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/236&oldid=1585277" இலிருந்து மீள்விக்கப்பட்டது