உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

203

இரைவேண்டுங் காலத்துங் குஞ்சு பொரிக்குங்காலத்தும் மிகச் சுருசுருப்புடன் முயன்று, பின்னர் முயற்சியற்று வாளா இருந்து கழியும் பறவைகள் முதலான சிற்றுயிர்களுக்கும் மக்கட்கும் வேற்றுமை இல்லையாய் விடும். இரைதேடித் தின்றபிற், சிற்சில காலங்களில் ஆணும் பெண்ணுமாய் மருவிச் சிறிது இன்புறும் அத்துணையேயன்றி, அதனின் மிக்க இன்பத்தைத் தொடர்பாக நுகர்தற்கேனும், அந்நுகர்ச்சியினைப் பயத்தற்கேற்ற அறிவினை மேன்மேற் றோற்றுவித்தற்கேனும் அச்சிற்றுயிர்கள் வல்லன அல்ல. மக்களோ தமக்கு அரிதின் வாய்த்த பகுத்தறிவின் மாட்சி காண்டு தமது வாழ்க்கையில் வருந்துன்பங்களை வரவரக் குறைத்து, நாளுக்கு நாள் தாந் தொடர்பாக இன்பந் துய்த்தற் கேற்ற வழி துறைகளைத் தம்மறிவு முயற்சியாற் கண்டடைந்து வருகின்றனர். வ்வாறு அறிவும் இன்பமும் நாளுக்கு நாட்பெருகப்பெறும் மக்கள் வாழ்க்கைதான் நாகரிக வாழ்க்கை யென்றும், மற்று அவையிரண்டும் பெருகுதல் இல்லாத மாக்களின் உயிர்வாழ்க்கையோ நாகரிகமில்லா வெற்றுயிர் வாழ்க்கையென்றும் வழங்கப்படும். தமக்குள்ள பகத்தறிவினைப் பயன்படுத்துகின்றவர்களே மக்கள்; மற்று, அதனைப் பயன் படுத்தாதவர்களோ மாக்கள். இந்த உண்மைமுறையில் வைத்து நம் நாட்டவர் வாழ்க்கை நிலையினையும் மேல்நாட்டவர் வாழ்க்கை நிலையினையும் ஒப்பிட்டுப் பார்க்குங்கால், மேல் நாட்டவர் நிலையே மிகவும் பாராட்டற்பாலதான விழுப்ப முடைத்தாய் விளங்கா நிற்கின்றது. நீராவிப்பொறி, அச்சுப் பொறி, காவல்விளக்கு (Safety lamp) மின் செய்தி (Electric tele- graph), கம்பியில் செய்தி (Wirless message) முதலான பல வியப்பு களை யெல்லாம் அரும்பாடுபட்டுத் தாங் கண்டறிந்த தல்லாமலுந், தாங்கண்ட அவ்வியப்புகளைக் கோடிகோடி யாகப் பொருட்செலவு செய்து இம்மாநிலமெங்கும் பரப்பி, எல்லா மக்கள் இனமும் அவற்றின் பயனை யெய்தி, முன்னே தமக்கிருந்த பல்பெருந் துன்பங்களெல்லாம் நீங்கி இன்புற்று வாழுமாறு பேருதவி புரிந்துவரும் மேனாட்டறிஞரின் அறிவு முயற்சி, எல்லா மாந்தரின் நன்றியறிவுக்கும் இட னாய்த் திகழ்கின்றதன்றோ?

அங்ஙனம் மேனாட்டறிஞர் கண்டறிந்து பரப்பிய பல்பெரும் பொறிகளில், நூல்நூற்கும் பொறியும் மிக்க தொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/235&oldid=1585268" இலிருந்து மீள்விக்கப்பட்டது