உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

  • மறைமலையம் -18

சய்வது தன்மகனை நல்வழியில் நடப்பித்தற் பொருட்டு நல்லெண்ணங்கொண்டு செய்வதேயாகலின், சொல்லு செயலுந் தீயவாய்க் காணப்படுதல் பற்றி, அவனது எண்ணமுந் தீயதேயாகுமெனக் கோடல் பொருந்துமோவெனிற்; கூறுதும், தன் பிள்ளையைத் திருத்துதற்பொருட்டு முதன் முதல் உண்டாய எண்ணம் நல்லதேயாகும்; ஆனாற், பின்னர் அதன் பொருட்டு அவனைத் திட்டுதற்கும் அடித்தற்கும் எண்ணிய எண்ணமோ தீயதேயாகும்; பின் உண்டான அவ் வெண்ணந் தீயதல்லாவிட்டால் அவன் தன் புதல்வனைத் திட்டுதலும் அடித்தலுஞ் செய்யமாட்டாதவனாவன். ஆதலாற், றீய சொற்செயல் நிகழும்போதெல்லாம் அவை தமக்கு முதலான தீய எண்ணமும் ஒருவன் உள்ளத்தே ஒருங்கு நிகழ்ந்தே தீரல் வேண்டுமென உணர்ந்துகொள்க.

6

அவ்வாறு கொள்ளின், தன் ன் மகாரை ஒறுக்குந் தந்தையின் செயல் நல்லெண்ணம் பற்றியே நிகழ்ந்ததெனக் கோடல் யாங்ஙனம் எனின்; ஒரு நேரத்தில் ஒருவன் செய்யுஞ்செயல் தீயதாகவோ நல்லதாகவோ காணப்படுதல் பற்றி அவனை முழுதுந் தீயனென்றோ நல்லனென்றோ முடித்துவிடுதல் பொருந்தாது.மற்று, அவன் அதனைச் செய்யும் நேரத்திற்கு முற்பட்ட காலங்களிற் கொண்ட எண்ணமும், அதனைச் செய்ததற்குப் பிற்பட்ட காலங்களிற் கொள்ளும் எண்ணமும் எத்தகைய வென்று அவ்விரண்டனையும் இணைத்துப் பார்த்துப், பின்னர் அவனை நல்லனென்றோ தீயனென்றோ முடிவு கட்டுதலே வாய்வதாகும். தீது செய்யுந் தன் மகனை ஒறுக்கும் ஒரு தந்தையானவன், அவனை ஒறுக்கும் அந்நேரத்தில் மட்டுந் தீய எண்ணம் உடையவனேயல்லால் அதற்கு முன்னும் பின்னுந் தன் மகனுக்குத் தீது நினைத்தவன் அல்லன்; அதற்கு முன் அவனைச் சீர்திருத்தும் நல்லெண்ணமே தன்னுளத்துக் குடிகொளப் பெற்றவனாவன்; அவனை யொறுத்த பின்னுந் தன் நெஞ்சங்கசிந்து, ‘என் அருமைப் புதல்வனை யான் அடிக்கலானேனே!' என்று கண்ணீர் சிந்திக் கலுழ்வதுஞ் செய்வன்.

இனி, ஓர் ஆட்டுவாணிகனோ தான் வளர்க்கும் ஆடுகளுக்குக் கொழுமையான தீனிகொடுத்து அவைகளை எவ்வளவோ

கண்ணுங்கருத்துமாய்ப் பாதுகாத்து

வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/244&oldid=1585344" இலிருந்து மீள்விக்கப்பட்டது