உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

213

கின்றான். அங்ஙனம் அவ்வாடுகளை அவன் அன்புடன் பாதுகாத்து வளர்த்துவரும் நற்செயலைக் கண்டு அவனை முழுதும் நல்லெண்ணம் உடையவன் என்று கருதிவிடுதல் கூடுமோ? கூடாதே, ஏனெனின், அவன் அவைகளை நன்றாய்க் காழுக்க வளர்த்தபின், அவைகளை ஆடறுக்குங் கொட்டிலிற் காண்டுபோய்விடுத்து, அவற்றின் கழுத்தை அ துடிதுடிக்க வெட்டி, அவற்றின் இறைச்சியை விலை செய்யக் காண்கின்றோமாகலின் அவன் தன் ஆடுகளைக் கொழுமை

யாக

சயல்

வளர்க்கும் அக்காலத்தில்மட்டும் நல்லெண்ணம் உடையனாயிருந்தாலும், அவற்றை வளர்க்கத் தொடங்கும் முன்னும் அவற்றை வளர்த்த பின்னும் அவை தம்மைக் கொலை செய்து அவற்றின் ஊனை விற்றுக் காசு பெறுந் தீயவெண்ணமே தன் மனத்திற் குடிகொளப்பெற்றவனா யிருத்தலின், அவன் முழுதும் நல்லெண்ணம் நல்லெண்ணம் வாய்ந்தவன் அல்லனென்பது எவர்க்கும் விளங்கற்பாலதேயாம். ஆகவே ஒருகாலத்து ஒருவன் பாற் காணப்படும் நல்லசொல் நல்ல செயல்பற்றி அவனை முழுதும் நல்லனென்றலும், தீய சொல் தீயசெயல்பற்றி அவனை முழுதுந் தீயனென்பதும் ஆகா. ஆனாலும், எவர்பால் எக்காலத்து எவ்விடத்து ஒரு நற்சொல் ஒரு காணப்படுகின்றதோ, அவர்பால் அக்காலத்து அவ்விடத்து அவருளத்து அவ்விரண்டற்கும் அடிப்படை யாய்த் தோன்றியது நல்லெண்ணமேயாகுமென்பதும், அங்ஙனமே ஒரு தீச்சொல் ஒரு தீச்செயல் நிகழ்ந்தக்கால் அவை தமக்கு முதலாய் நின்றது தீயதோர் எண்ணமே யாகுமென்பதும் மறுக்கலாகா உண்மையாமென்று தெளிந்து கொள்க அவ்வாறு தெளியவே, மக்களின் சொல்லுக்குஞ் செயலுக்கும் முதலாய் அவரது உள்ளத்தின் கட் டோன்றுவது அவரது எண்ணமே யாகுமென்பதும் அதன் வழியே தெளிந்து கொள்ளப்படும் என்க.

எனவே, அறம் எனப்படுவது, ஒருவனுடைய சொற் செயல்களின் உள்ளே சினைத்துக்கிளம்பிய பொல்லாங் கினை அறுத்து அகற்றுதற்கு முன், அவற்றிற்கு முதலான நினைவின்கட் சினைக் னைக்கொண்ட தீயவெண்ணத்தை அறுத்துக் களைவதாகும் என்னும் உண்மை நன்கு புலனா கின்றதன்றோ? இவ்வுண்மை கண்டன்றோ நந் தெய்வத் திரு வள்ளுவர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/245&oldid=1585352" இலிருந்து மீள்விக்கப்பட்டது