உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் -18

66

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற’

(குறள் 34) என்று அருளிச்செய்தார். எல்லா எண்ணங்களுந் தோன்று தற்கு நிலைக்களனான ஒருவனது மனங் குற்றமின்றித் தூயதாக இருக்குமாறு ஒருவன் செய்து கொள்வதே அவனுக்கு அறமாகும்; மற்று மனத்தூய்மையின்றி அவன் தன் சொல் லாலுஞ் செயலாலுஞ் அறம்போற் செய்வனவெல்லாம் வெற்றாரவாரமே யாகுமல்லால் அவை அறமாதல் சிறிது மில்லை யென்பதே நாயனார் கருத்தாதல் தெற்றென விளங்கா நிற்கின்றது.

னி, அறங்களுட் சிறந்ததுந் தலையாயதும் இறைவனைத் தூயநெஞ்சத்தால் நெக்குருகி உண்மையான் வழிபடுதலே யாகும். தூயநெஞ்சமும் உண்மையன்புமின்றிப் பொய்ம்மை யாகச் செய்யும் வழிபாட்டைக் கண்டு இறைவன் நகைசெய்து அருவருப்பன் என்னும் உண்மையைத் திருநாவுக்கரசு நாயனாரும்,

“நெக்கு நெக்கு நினைப்பவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு

நக்கு நிற்பன் அவர்தமை நாணியே”

என்று நன்கு விளக்கியருளுதல் நினைவிற் பதிக்கற் பால தாகும். இங்ஙனமே திருமூலரும்,

66

என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்

பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழைவார்க் கன்றி

என்பொன் மணியினை எய்தவொண் ணாதே”

என்று மிக வலியுறுத்திக் கூறுதல் காண்க. இதனால் தன் எலும்பையே விறகாக அடுக்கித் தன் னுடம்பின் தசையையே பலியாக அறுத்து வேள்வித்தீயி லிட்டு ஆரிய மறையிற் கூறிய 'புருஷமேதத்தை' ஒருவன் செய்தாலும், அன்பினால் உருகி நெஞ்சம் இளகுவார்க்கன்றி, அங்ஙனம் அங்ஙனம் வேள்வி செய் வானுக்கும் இறைவனை அடைதல் இயலாதென்பது நன்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/246&oldid=1585361" இலிருந்து மீள்விக்கப்பட்டது