உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

215

பெறப்படுகின்றதன்றோ? ஆகவே, மனம் மாசு அறுதற்கு அன்பினால் மனங்கரைதல் இன்றியமையாததாதல் பெறப் படுகின்றது. செம்பில் ஏறிய களிம்பை ஒருவன் நீக்கவேண்டு மானால் அவன் அதனைப் புளியிட்டு விளக்கித் தூய்தாக்குதல் காண்டு மன்றே? அதுபோலவே, மக்களின் மனத்தகத் தேறிய அழுக்கை அவர் அகற்றல் வேண்டுமாயின், அதனை அகற்ற வல்ல அன்புகொண்டே அதனைத் துடைத்துத் தூய்மை சய்தல் இன்றியமையாததாகும். மனமாசு நீக்குதல் இன்றியமையாததாகும். மனமாசு நீக்குதல் வேண்டுமென்று மட்டுஞ் சொல்லி, அதனை நீக்குதற்கேற்ற கருவியினை ஆசிரியர் அறிவுறுத்தாது போயினராயின், அவரது அறிவுரையினைக் கேட்டார்க்கு அவ்வுரை பயன்படாதே போய்விடும். அது கண்டே அவர்,

66

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது

وو

(குறள் 45)

என்று அருளிச்செய்தார். எனவே, மனம் மாசறத் தூய்மை செய்தற்கு அன்பும் அறனும் ஒருதலையான் வேண்டப்படும் என்பது ஆசிரியரால் வற்புறுத் துரைக்கப்பட்டமை நினைவிற் பதிக்கற்பாற்று. தம்மொடு தொடர்புடையார் மாட்டு உண்டாகும் உள்ளக்கசிவாகிய அன்புந், தமக்குத் தொடர் பிலார் மாட்டும் உள்ளம் நெகிழும் அன்பின் முதிர்ச்சியான அருளால் நிகழும் அறமும் ஒருவர் பாற்றோன்று மாயின் அவர் தம் மனம் மாசுதீர்ந்து சுடர்விரிபசும்பொன்னெனத் திகழ்தல் திண்ணம்.

வை

இனி, மனத்திற்கு அழுக்காவன யன்று தெளிவாய்த் தெரிந்தாலன்றி, மனத்தினின்றும் விலக்கற் பாலதனை விலக்குதல் இயலாது. ஆதலால், அதற்கு அழுக்காவன இவையென்று தெளிவிப்பார்,

66

“அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்ற தறம்”

(குறள் 35) என்று ஆசிரியர் அவையிற்றைக் கிளந்தெடுத்துக் கூறினார். இதனாற், பிறர்க்குள்ள கல்வி செல்வம் புகழ் புண்ணியங்கள் கண்டு பொறாமைப்படுதலும், விரும்பத் தகாதவைகள்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/247&oldid=1585369" இலிருந்து மீள்விக்கப்பட்டது