உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மறைமலையம் -18

அளவிறந்த விருப்பம் வைத்தலுங், காரணம் இல்வழியும் பாராட்டத்தகாத புல்லிய காரணம் உள்வழியும் வெகுளலும், பிறர்க்குத் தீங்கு பயக்குஞ் சொற்களைச் சொல்லுதலும் ஒருவரது உள்ளத்திற்கு மாசாதல் நன்கு விளங்கா நிற்கின்றது. மனத்தை மாசுபடுத்தும் இத்தீய நிகழ்ச்சிகள் நிகழ்ந்தவழி எத்தகையோரும் நல்லறிவு மங்கித் துன்பத்திற்கே ஆளா கின்றனர். இத்தீய நிகழ்ச்சிகள் தம்மிடத்தே தோன்ற வழி செய்தார்க்குப் பிறர் ஏதொரு தீங்குந் துன்பமும் விளைக்க வேண்டுவதில்லை; அவர் தாமே தமக்குச் சொல்லொணாத் துன்பங்களை விளைத்துக் கொள்பவர் ஆவர். இந்நிலையும்,

66

"அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது”

(குறள் 165)

என்னுந் திருக்குறளால் ஆசிரியர் நன்கெடுத்துக் காட்டி னார். ஆகவே, தன்னுயிர்க்குத் துன்பத்தை வருவித்துக் கொள்ளாமைப் பொருட்டாவது ஒருவர் இத்தீய நிகழ்ச்சிகள் தம்மகத்தே நிகழாமல் தம்மைப் பாதுகாக்கக் கடமைப்

பட்டிருக்கின்றாரென்க.

அது கடமையே யாயினுந், தாம் அறியாமலே தம் மனம் பிறரது செழுமை கண்டு பொறாமைப்படுதல் முதலான தீய செயல்களைச் செய்வதாயிருத்தலின், அஃது அங்ஙனஞ் செய்யாதிருத்தற்கு எளியதொரு வகையுண்டோ வெனின், உண்டு. தீய எண்ணங்களை நீக்க முயல்வோர் அத்தீய எண்ணங்களையே நினைத்துக்கொண்டிருந்தால், அவை அவரது நினைவை விட்டு நீங்கா. மற்றுத், தீயவைகளுக்கு மாறான நல்லவைகளை நினைவுக்குக் கொண்டுவந்தால் மட்டுமே தீய வெண்ணங்கள் நெஞ்சைவிட்டு அகலும். அங்ஙன மாயினும், நல்லெண்ணங்கள் என்பன, மற்றை எண்ணங்களைப் போலவே, கட்புலன் ஆகாதனவாதலாற், கட்புலனாகாத அவற்றை நினைவிற்குக் கொண்டுவருதல் யாங்ஙனம்? எனின்; எண்ணங்கள் எல்லாம் ஒருவர் மற்றவர்களுடன் தொடர் புற்று நின்று செய்யுஞ் செயல்களை நினைப்பதனாலேயே நெஞ்சத்தில் எழுகின்றனவன்றி, வேறு வகையில் எழுதலை யாண்டும் எக்காலத்துங் காண்கிலேம். உண்ணச் சோறும் உடுக்கக் கூறையுமின்றி வருந்தும் ஒருவனைக் கண்டு மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/248&oldid=1585378" இலிருந்து மீள்விக்கப்பட்டது