உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

  • மறைமலையம் -18

அவற்றிற் பெருகி யோங்கித் தமக்கும் பிறர்ககும் பயன்பட்டு வாழ்கவென்று மனத்தால் நினைத்து வாயால் வாழ்த்துதல் வேண்டும். இவ்வாறு செய்தலிற் பழகிவரவே, பிறர்க்குள்ள கல்வி செல்வம் முதலியவைகளைக் கண்டு உளதாம் மனப் புழுக்கம் அறவே நீங்கும்.

அங்ஙனமே, ஒருவர்க்குள்ள செல்வத்தையும், ஒருவர்க் குள்ள அழகையும் கண்டு பேராவல் கொண்டு அவரது பொருளைக் கவரவோ அழிக்கவோ கருதாமல், அழ குடையவரைத் தான் கூடிக் களிக்க விழையாமல், தமக்குள்ள பொருளை நல்வழியிற் பெருக்கவும், தமதுடம்பின் அமைப்பை நன்முறையில் அழகுபடுத்தித் தமக்குரியா ய உடல்நல மனநலங்களையும் அவ்வாறே தக்க முறையில் அழகுறச்செய்து தம்மவருடன் ன் கூடி இனிது வாழவும் ஒவ்வொருவரும் முயற்சி செய்தல் வேண்டும். இவ்வாறு செய்துவரவே பிறருடைய செல்வப்பெருக்கு வனப்பின் மிகுதி கண்டு அவற்றின்மேற் செல்லும் அவா தம்முள்ளத்தில் தலைகாட்டாதொழியும்.

ருடை

இனிப், பிறர்பாற் காணப்படும் குற்றங் காண்புழி உண்டாம் வெகுளியினை நீக்கிக்கொள்ளுதலும் வருத்த மான செயலன்று. மக்கள் எல்லாருங் கல்வியறிவு ஒழுக்கங் களில் எத்துணைச் சிறந்தவராயிருந்தாலும் நொடிக்கு நொடி மறந்துவிடும் மறதிக்குணமும், அதுகாரணமாக வரும் அறியாமையும் இயல்பாகவே உடையராதலால், அவரெல் லாருஞ் சிற்றறிவுடைய சிற்றுயிர்களே யல்லாமல், முற்றறி வுடை ய கடவுள் அல்லர். அற்றாயின், மக்களுட் சிலரைப் பேரறிவினர் என்றல் ஏன் எனின், தம்மினுங் குறைந்த அறிவினரை நோக்க அவர் பேரறிவினரென உயர்த்துப் பேசப்பட்டனரே யன்றி, அவரும் முற்றறிவினர் அல்லர். அவரினும் அறிவின்மிக்கார் வரின் அவரெதிரே அப்பேரறி வினருஞ் சிற்றறிவினராய்விடுதல் திண்ணம். இன்னுஞ், சிற்சில நேரங்களில் சிற்றறிவினர் கட்டும் நுண்ணறிவுக்கு முன் பேரறிவினருஞ் சிற்றறிவினராகித், தலைகுனிதலைக் காண்கின்றாம் அல்லமோ? ஆகவே, மக்களெல்லாரும் ஏற்றத் தாழ்வான அறிவுடைய சிற்றுயிர்களே யென்பதும், எல்லாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/252&oldid=1585411" இலிருந்து மீள்விக்கப்பட்டது