உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

221

பிணிமூப்புகளின் வாய்ப்பட்டு இறந்தொழிபவர்களே யல்லால் நிலையாக ருப்பவர் எவரும் இல்லை யென்பதும், எல்லாருந் தம் வாழ்நாள் எல்லைக்குட் செய்யுங் குற்றங்கள் கணக்கிலவாமென்பதும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த உண்மைகளேயாதல் எல்லாரும் நினைவிற் பதித்தல் வேண்டும். இங்ஙனம் இவ்வுண்மைகளை நினைவிற் பதிப்பவர்கள், தம்மொடு தொடர்புடையார் அறியாமையாலுஞ் சிற்றறி வாலும் மறதியாலுஞ் செய்யுங் குற்றங் குறைகளைக் கண்டு வெகுளார். குற்றங்குறைகளைக் கண்டு வெகுளலும் மக்களின் மனவியற் கையாயிருத்தலின், அதனை மாற்றுதல் இயலுமோ வெனின்; இயலும். தம்மின் மெலியார் செய்யும் பிழைகளைப் பொறாமல் தாஞ்சினங்கொளல் போலவே, தாஞ் செய்யுந் தவறுகளைக் கண்டு தம்மின் வலியார் தம்மேற் சீற்றங் காள்வரல்லரோ? அப்போது “எம்மனம் எத்துணை நடுக்கம் உறுகின்றது! அதுபோல், எமது வெகுட்சியினைக் கண்டு எமக்கு அடங்கிய இவர் எத்துணை நடுங்குவர்? ஆதலால், இவர்மீது யாஞ்சீற்றம் கொள்ளுதல் நன்றன்று" என என ஒவ்வொருவருஞ் சிறிது கருதிப்பார்ப்பராயின், அவருள்ளத்திற் சினமுஞ் செற்றமும் வேரூன்றாமல் மறைந்துவிடும். வ் வழியினையே தெயவத் திருவள்ளுவரும்,

“வலியார்முற் றம்மை நினைக்க தாந் தம்மின் மெலியார்மேற் செல்லு மிடத்து”

வளிய

(குறள் 250)

என நம்மனோர்க்கு நன்கெடுத்து அறிவுறுத்தருளினார்.

னி, இன்னாத சொற்கள் தம் வாயினின்றும் பிறவாமல் தம் நாவினைக் காத்து ஒழுகுதலும் எளிதிற் பழகக் கூடியதேயாம். ஏனென்றால், அன்புநிறைந்த நெஞ்சம் உடையான் ஒருவன் வாயில் இன்சொற்களே யல்லாமல் வன்சொற்கள் எட்டுணையுந் தோன்றா. அன்பு என்னும் இளஞாயிறு ஒருவன் நெஞ்சத்துள் எழுங்கால், அதற்கு முன் அவனது நெஞ்சம் பனிப்பாறைபோல் வல்லென்றிருந் தாலும், அதன் கதிரொளி தோய்ந்த அளவானே, அது நெகிழ்ந்து நீராய் உருகுகின்றது; அவனது முகம் அதற்குமுற் கூம்பி அழகின்றி அருவருக்கத் தக்கதாயிருந்தாலும், இப்போது வீசும் அதனொளியினால் அழகிதாக மலர்ந்து செழுந்தாமரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/253&oldid=1585420" இலிருந்து மீள்விக்கப்பட்டது