உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

மறைமலையம் -18

போதெனத் திகழ்ந்து எவரும் விரும்பத்தக்கதாகின்றது; இதற்குமுற் கொடுஞ்சொல்லென்னும் முடைநாற்றக் கைப்புநீர் ஒழுகிய அவனது வாய் இப்போது இதழ்விரிந்த செந்தாமரை மலரினின்று சொட்டும் நறுந்தேன் என நினைத்தொறுந் தித்திக்குஞ் செஞ்சொற்களைப் பொழிகின்றது. இங்ஙனமாக எல்லாரிடத்தும் அன்பு பூண்டு நடப்பானுக்கு ஏதோருழைப்பு மின்றியே இன்சொற்கள் தாமாகவே வருதலின், தன்பால் இன்னாச்சொற்கள் காணப்படாதொழிய வேண்டுவோன், தான் அனைவரிடத்தும் உண்மையன்பு காட்டி யொழுகுதலே எளியதொரு வழியாய் இருக்கக் காண்பன்.

அவ

அஃதொக்கும், நன்மையுந் தீமையும் விரவிய பலதிறக் குணனும் பலதிறச் செய்கையும் வாய்ந்த பலதிறத்தவரான மாந்தர்களுடன் எல்லாம் நாம் உண்மையன்பு காட்டி நடத்தல் யாங்ஙனங் கைகூடுமெனின்; எல்லாரும் இறைவ னாருவனாற் படைக்கப்பட்ட L வரே யாகையால், ரெல்லாரும் ஒரே தந்தைக்குப் பிறந்த புதல்வர்களே யாவரல்லாற் பிறிதில்லையென்பதும், எல்லாரும் இவ்வுலகிற் சிறிதுகாலம் உண்டு உடுத்து உறங்கிப் பின் இதனைவிட்டுச் சடுதியில் நீங்கிப் போபவர்களாகவே காணப்படுதலால் இந்நிலவுலகும் இதன் அகத்துள்ள அரும்பண்ட அரும்பண்டங்களும் எவர்க்கும் நிலையாக நிலையாக உரியவைகள் அல்ல அல்லவென்பதும் எத்துணை அறிவிற் சிறியவர்களும் நன்குணர்ந்திருக்கின்றனர்; அதனால், நிலையில்லா வாழ்வினராகிய மக்கள் இவ்வுலகியற் பொருள்களின் பொருட்டும் இவைகொண்டு நுகருஞ் சிற்றின்பத்தின் பொருட்டுந் தம்முட் பகைபாராட்டி, இச்சிறிய வாழ்க்கையிலும் நெடுக அல்லல் உழப்பது எத்துணைப் பேதைமை! என்று நினைந்து பார்க்கப் பார்க்க எல்லாரையுந் தம்முடன் பிறந்தவராகக் கருதி, எல்லார் மாட்டுங் கனிந்த உள்ளத்தினராய் இன்சொற்பேசி யொழுகும் பழக்கம் எளிதிலே எவர்க்குங் கைகூடுமென்க.

என்று மேற்காட்டிய வகையாலெல்லாம் அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் என்னும் நான்கு பெருந் தீங்குகளும் ஒருவன் தன்கண் நிகழாமைக் காத்தற் பொருட்டு, அவற்றிற்கு எதிரிடையான நினைவு சொற்செயல்களைத் தன்மாட்டு இடையறாது தோற்றுவிக்கவே, அவனது உள்ளந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/254&oldid=1585428" இலிருந்து மீள்விக்கப்பட்டது