உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

மறைமலையம் -18

செயாநிற்பர்; அஃதவர்க்குரிய அறக்கடமையேயாம். தம துள்ளத்தைத் தூய்தாக்கி இன்சொற் பேசுதலொடு மட்டும் நின்றுவிடுதல் முழு அறம் ஆகாது; அஃதறத்தின் ஒரு பகுதியேயாம்; அவ்வொரு பகுதியின் மட்டும் அமைந்து வாளாதிருக்க அறவோருளம் ஒரு சிறிதும் ஒருப்படாது. ஏழையெளியவர் தொகையே மிகுந்துள்ள பொதுமக்களைப் பலதுறைகளிலும் எதிர்வந்து நலியும் வறுமையை நீக்கு தற்குப் பொருளுங் கல்வியுமே கட்டாயமாக வேண்டப் படுவன. அதனை நன்குணர்ந்த சான்றோர், செல்வர்களைத் தூண்டி எளியோர்க்குப் பொருளுதவியுங் கல்விப் பயிற்சியுந் தருதல் மிகவும் வருத்தமுடைத்தாதல் கண்டு, தாமே அறத்தாற்றாற் பொருள் ஈட்டித் தம்மால் இயன்றவளவு வறியார்க்குப் பொருளுதவி புரிந்தும், அதனினும் சிறந்த கல்வியறிவினைப் புகட்டியும் அறஞ்செயாநிற்பர். இவ்வாறு அறஞ்செய்தற்பொருட்டு மனமாசற்ற சான்றோர் பொருள் திரட்டும் மெய்ம்மையினை ஆய்ந்துணராதார், “எல்லாந் துறந்த இவர்க்குப் பொருள் ஏன்?” என எளிதாய்க் கூறி நகையாடா நிற்பர். பொருளுங் கல்வியும் மனமாசு தீர்ந்த அற்வோர்க்கு உளவாயின் அவை வ பொதுமக்களின் நன்மைக்குப்

வகையிற் பயன்படும். அவையிரண்டும் அறநெஞ்சம் இல்லார்க்கு வாய்ப்பின், அவை ஏழை மக்கட்குப் பயன்றராமையேயன்றி, அவர்க்குப் பல்பெருந் தீமைகளையும் பயவாநிற்கும். பொருள்படைத்த செல்வர்களில் எத்தனைபேர் கட்குடித்தும், வேசிகளை மருவியும், ஏழை மகளிரைக் கற்பழித்தும், நல்லோர்க்குத் தீமை செய்துந், தந் தீய செயல்கட் கிசையாதவரைக் கொலை புரிந்தும், அழிவழக்காடி எளியோர் உரிமைகளைக் கவர்ந்தும், இக் க்கொடுஞ் செயல்கட்குக் கருவியாக அரசியலில் உயர் நிலைகளை வலிந்து பெற்றுந், தமது பொருனைப் பாழாக்குகிறார்கள்! அங்ஙனமே கல்வியறிவைப் பெற்றவர்களில் எத்தனைபேர் தாம் அரிதிற் பெற்ற அவ்விழுப்பொருளை மேலுமேலும் பெருக்காமல், அல்லும் பகலும் அரும்பெரும் பொருள்களை ஆராயாமல், அருமையாய் ஆராயினும் ஆராய்ந்தவைகளைப் பிறர்க்கு அறிவுறுத்தாமல், தாங்கற்ற சிறிதைப் பெரிதாகத் தாமே இறுமாந்து மதித்துத், தம்மினும் மிகக்கற்று அடங்கித் தாம் அறிந்த மெய்ப்பொருள்களைச் சொல்லாலும் நூலாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/256&oldid=1585445" இலிருந்து மீள்விக்கப்பட்டது