உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

225

உலகிற்குப் பயன்படுத்துஞ் சான்றோரைக் கண்டு வாழ்த் தாமல் வயிறெரிந்து அவரது அறச்செயலுக்கு மறச்செயல் செய்து தீராப்பழியினையுந் தீவினையினையும் பெருக்கு கின்றனர்! இன்னுங், கற்றவர்களில் வேறு எத்தனைபேர் பாராட்டத் தகாத செல்வர்களைப் பாராட்டியும், அவர் இட்ட குற்றேவல் செய்தும், அவர்தங் காமக்கிழத்தியர்க்குத் தூது போகியும், அவர் வீசுங் காசுக்குந் தூசுக்குங் காத்து நிற்கின்றனர்! உண்மையான் நோக்குங்காற் செல்வமுங் கல்வியும் அறநெஞ்சம் உடைய துறவோர்க்குத் தாம் இன்றியமையாது வேண்டற்பாலனவேயல்லால் அவரல்லாத பிறர்க்கு வேண்டற்பாலனவாகா. அறநெஞ்சம் இல்லார் கைப்படின் அவையிரண்டும் உலகிற்குத் தீமையை விளைப்பக் காண்டும்; மற்று, அற்நெஞ்சம் உடையார் கைப்படிலோ அவை, அவையிரண்டிலும் வறியார்க்குப் பல்லாற்றானும் நிலை யான பெரும்பயனைப் பயப்பக் காண்டும். ஆகவே, அற நெஞ்சம் வாய்ந்த துறவோர்க்குக் கல்வியொடு செல்வமும் வாய்ப்பின், அஃது உலகத்தவர்க்குப் பலவகையாற் பயன் பட்டு அவரை நல்லவாய் அறிவிற் சிறந்தாராய் மிடியின்றி வாழச்செய்யும் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/257&oldid=1585453" இலிருந்து மீள்விக்கப்பட்டது