உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

மறைமலையம் 18

9. கானத்தோகை தேவமணி கதை

கானத்தோகை என்னும் மங்கை நுண்ணறிவும் பேரழகும் வாய்ந்தவள். ஆனால், அவளுக்கு வாய்த்த தந்தையோ தன் உழைப்பினால் ஏராளமான பொருளைத் தொகுத்து, அப்பொருளையே தெய்வமாக நினைந்து களிப்பவன்.

தேவமணி என்னும் இளைஞன், கல்வியிலுஞ் சிறந்த நடையிலும் புகழ்பெற்ற தொன்றாயினும் பொருள் இழந்து நொந்துபோன ஒரு குடும்பத்திற் பிறந்தவன்; கல்வியிலும் நல்லொழுக்கத்திலும் பெருந்தன்மையிலும், மிக்கவன்.

இவ்விளைஞனுக்கு இருபதாம் ஆண்டு நடக்கையில் வன் கானத்தோகை யன்னும் ம் மங்கையைக் கண்டு அவளோடு பழக்கங்கொள்ளலானான்; அப்போது கானத் தோகைக்கு அகவை பதினைந்து. இம்மாதின் தந்தையின் வீட்டிற்குச் சிறிது தொலைவிலேயே வனது இல்லம் அமைந்திருந்தமையால், இவன் அடுத்தடுத்து அம்மடந் தையைக் காணுதற்கு அமயம் வாய்ந்தது. இவன் அழகிய உருவம் உடையனாயிருந்ததுடன் இனிதாக உரையாடும் யல்பினனாயும் இருந்தமையால், எக்காலத்துங் கலைக்க முடியாததான தன்னைப் பற்றியதோர் அழுத்தமான எண்ணத்தை அவள் நெஞ்சத்திற் பதித்து விடலானான். இவனும் அவளது வனப்பினாற் கவரப்பட்டது சிறிதன்று. இவர் இருவரும் நெடுநாட் பழகப் பழக இன்னும் இன்னும் உயர்ந்த அழகிய இயல்புகளை ஒருவர் ஒருவரிற் கண்டு இன்புறலாயினர்; இதிலிருந்து படிப்படியே இவர் ஒருவர் மீதொருவர் கொண்ட காதலானது, இவர் தம் வாழ்நாள் எல்லையளவும் இவரைத் தொடர்புபடுத்தி நிற்கவல்லதாயிருந்தது.

அஃது அவ்வாறு நிகழ்கையிற் கானத்தோகையின் தந்தைக்குந் தேவமணியின் தகப்பனுக்கும் இடையே கலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/258&oldid=1585462" இலிருந்து மீள்விக்கப்பட்டது