உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

227

விளையலாயிற்று. ஒருவன் தனக்குள்ள செல்வவளத்தால் தன்னைத்தானே மிகுதியாய் உயர்த்துப்பேசலாயினன்; மற்றவன் தனக்குள்ள பிறப்பின் மேன்மையால் தன்னைத்தானே பெரிதும் பாராட்டி மொழியலாயினன். கானத்தோகையின் அப்பனோ, தேவமணியின் றந்தைமேற் பருஞ்சினங்கொண்டு, அது காரணமாக அவன் புதல்வனான தேவமணிமேல் வெறுப்புக் கொள்ளலானான். அதிலிருந்து அவன் தனது இல்லத்திற்கு வரலாகாதென்று தடை செய்ததோடு, அவனைத் தன் மகள் இனிக் காணலாகாதென்றுங் கட்டுப்படுத்தினான். இன்னும், இக்காதலர் இருவருந் தாம் ஒன்றுசேருங் காலத்தை நோக்கி நிற்பதறிந்து, அவர்க்குள் இனி ஏதொரு தொடர்பும் உண்டாகாமல் தடுத்து விடுதற்காகச் செல்வமுந் தகுதியான தோற்றமும் வாய்ந்த ஏனையோர் இளைய ஆடவனைத் தெரிந் தெடுத்து, அவனையே தன் மகளுக்கு மணமகனாக்கக் கானத் தோகையின் றந்தை உறுதி செய்தான். அதன்பின் அவன் தன் புதல்விக்குத் தனது கருத்தினைத் தெரிவித்துத், திருமண மானது இன்னதொரு நாளில் நடத்தப்படல் வேண்டு

மென்றுங் குறிப்பிட்டான். தன் றகப்பனின் தலைமைச் செருக்கைக் கண்டு வெருக்கொண்ட கானத்தொகை, அவனாற் பொருத்தமுள்ளதாகக் கருதப்பட்ட ஒரு மணவினைக்குத் தான் குறுக்குச் சொல்வதிற் பயனில்லை யென்று கண்டு வாய் பேசாதிருந்தனள். அவள் அங்ஙனம் வாய் பேசாதிருந்த தனையே அவளது உடன் பாடாகப் பிழைத்துணர்ந்த அவடன் றந்தை, அத்தகையதொரு சிறந்த ஏற்பாட்டில் தன் றந்தையின் கருத்துக்கு இசைந்து நடக்க ஒருப்பட்டதே ஒரு கன்னிப் பெண்ணுக்குத் தக்க ஒழுகலாறாகு மென்று அவளைப் புகழ்ந்து பேசினான்.பிறகு, இங்ஙனம் அவன் நடத்தக் குறித்த மணவினைச் செய்தி தேவமணியின் செவிக்கு எட்டியது. காதலாற் கட்டுண்டார்க்கு இயற்கையே உண்டாகும் பலவகையான இன்னா எண்ணங்களால் தேவமணியின் நெஞ்சங் குழம்பியது; அதனால், அவன் கீழ்க்கண்ட கடிதம் ஒன்றனை வரைந்து அதனைக் கானத் தோகைக்குப் போக்கினான்.

“என்னருமைக் கானத்தேகையைப்பற்றி யான்கொண்ட நினைவு ஒன்றே எனக்குச் சில ஆண்டுகளாக இன்பம் பயப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/259&oldid=1585470" இலிருந்து மீள்விக்கப்பட்டது