உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

  • மறைமலையம் -18

தாய் இருந்தது, ஆனால், இப்போதோ அஃது என்னால் தாங்க வியலாத மனநோயினைத் தருவதாய் மாறிவிட்டது. நீ பிறன் ஒருவனுக்கு உரியளாய் இருத்தலை இனி யான் உயிரோடிருந்து பார்க்கவேண்டுமா? நாம் ஒருங்குகூடிப் பேசியிருந்த நீரோடை மருங்கும், விளைபுலங்களும், பசும்புல் நிலங்களும் இப்போ தெனக்கு ஆற்றொணாத் துயரத்தைத் தருகின்றன. நீ உலகத்தில் நீடு இனிது வாழ்க! ஆனாற், கீழ்க்குறிப்பிட்ட ஓர் ஆடவன் என்றோ இந்நிலவுலகில் இருந்தானென்பதை மறந்துவிடு!

தேவமணி.

இக்கடிதம், எழுதிய அன்றை மாலையே கானத் தோகையின் கையில் அது செலுத்தப்பட்டது; அதனை நோக் கியதும் அவள் உணர்வற்று வீழ்ந்தாள். மறுநாட் காலையில் உணர்வுகூடி எழுந்ததும், அவள் ஏக்கங்கொள்ளத்தக்க

சய்தியொன்று வந்தது; தேவமணி யென்பான் சென்ற நள்ளிரவில் தன் படுக்கை யறையைவிட்டு வெளிக்கிளம்பினவன் எங்குச் சென்றானென்பது தெரியவில்லை; அவனைப்பற்றி ஏதேனுந் தெரியுமா எனக் கேட்டறியும் பொருட்டு ஒருவர்பின் னொருவராய் இரண்டு மூன்று ஒற்றர்கள் தன் றந்தையின் இல்லத்திற்கு வந்து சென்றார்களென்பதே அச்செய்தியாகும். சின்னாட்களுக்கு முன் அவனது உள்ளத்தைக் கவிந்த பெருந் துயரானது, அவனதுயிரைக் கொள்ளைகொண்டதோ வெனக் கருதி அவர்கள் அஞ்சலாயினர். தனது திருமணத்தைப்பற்றிய செய்தியல்லாமல் வேறு ஏதும் அவனைக் கடைப்படியான அம்முடிவுக்குச் செலுத்தியிராதெனக் கருதிக் கானத்தோகை ஆற்றாத்துயரில் அழுந்தினள். அதனால், அவள் தன்றந்தை வேறொரு மணமகனைக் குறிப்பிட்டுப் பேசிய பேச்சிற்குத் தான் படிந்து செவிசாய்த்ததே ஒரு பெருங்குற்றமென்று தன்னைத் தானே நொந்துகொண்டதுடன், புதிதாகக் குறிப்பிடப் பட்டவனே தன் தேவமணியைக் கொலை புரிந்தவனா யினனென்றும் எண்ணி ஏங்கினாள். தன் றந்தை குறித்துச் சால்லிய திருமணங் குற்றத்திற்கும் அச்சத்திற்கும் ஏதுவாய் முடிந்தமையால், அத்தகைய தொன்றிற்குத் தான் இணங்கு வதைவிடத், தன் றந்தையின் மனத்தாங்கலுக்கும் அதனால் விளையுந் தீங்குகளுக்குந் தான் உள்ளாவதே சாலச்சிறந்த தெனத் தீர்மானஞ் செய்தாள். அதன்பின், தன் றந்தை கூறிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/260&oldid=1585478" இலிருந்து மீள்விக்கப்பட்டது