உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

229

திருமண ஏற்பாட்டிற்குத் தான் ஒரு சிறிதும் இணங்கல் முடியாதென்றும் ஒரே பிடியாய் மறுத்துக் கூறிவிட்டாள்.

கானத்தோகையின் றந்தையோ தேவமணி ஒழிந்து போனதைப்பற்றி மகிழ்ச்சியுற்றவனாயுந், தனது குடும்பப் பொருளில் ஒரு பெருந்தொகையான பரிசப்பணந் தனக்கு மிச்சமானதைப்பற்றி உவகைக்கடலில் அமிழ்ந்தினவனாயும் மாறுதல் எய்தினமையால், தன் மகள் தான் குறித்த மணத்திற்கு உடம்படாது முற்றும் மறுத்துக் கூறியதற்காகச் சிறிது கவலைப்பட்டிலன். தான் குறித்த மருமகனும் இம்மணம் ஒரு வசதிக்காக நிகழ்வதேயன்றிக் காதலால் நிகழ்வதன்றெனக் கண்டு கொண்டமையால், அவனுக்கு அவன் அம்மணம் நடவாது போனமைக்காக மன்னிப்புச் சொல்லிவிடுவதும்

எளிதாகவேயிருந்தது.

6

ங்

எந்

கானத்தோகையோ இப்போது கடவுளையே நேரமும் நினைத்து அவன் றிருவடிக்குத் தொண்டு ஆற்று வதிலன்றி வேறொரு வகையில் தன்னை அத்துணை வருத்திய அம்மனத்துயர் தீர்தற்கு வழிகண்டிலள். சில்லாண்டுகளுக்குப் பின் தனது மனத்துயரின் கொடுமை தணிந்து, தன் எண்ணங் கள் ஓர் அமைதியுற்றபின், அவள் தனது எஞ்சிய வாழ் நாளைத் துறவோர் திருமடம் ஒன்றிற்சென்று கழிக்க உறுதி சய்தாள். அவள் தந்தையும் அவள் கொண்ட எண்ணத் திற்காகச் சிறிதும் வருந்தவில்லை. ஏனென்றால், அஃது அவனது குடும்பச் செலவினை மிச்சப்படுத்துதற்கு ஓர் வாயிலாகு மன்றோ? ஆகவே, அவன் தன் புதல்வியின் கோரிக்கைக்கு உடனே இசையலானான். இசைந்து அவளது இருபத்தைந்தாம் ஆண்டில்- அவடன் பேரெழில் மிகுந்து முகிழ்த்துத் தோன்றும் அக்கட்டிளமைப் பருவத்தில், அடுத்துள்ளதொரு நகருக்கு அவளை அழைத்துச்சென்று, அவளை வைத்தற்குத் தக்க துறவு மாதர் வாழும் ஒரு திருமடத்தை அவட்குக் காட்டினான். காட்டக், கானத்தோகை அதன்கண் இருந்துவிடுதற்கு மனம் உவந்தமை கண்டு அங்கே அவள் இருத்தற்கு வேண்டும் ஏற்பாடு களெல்லாஞ் செய்துவைத்துப் போயினான்.

கு

இனி, இத்திருமடத்திற்குத் தலைவராய் அமர்ந்த முனிவர் கடவுள் நேயத்திலும் நன்னடையிலுஞ் சிறந்து புகழோங்கப்பெற்றவர் ஆவர். கானத்தோகை சேர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/261&oldid=1585487" இலிருந்து மீள்விக்கப்பட்டது