உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்க்கான இன்றமிழ்

231

இத்துறவியின் பெயரேனுங் குடும்பச் செய்தியேனுஞ் சிறிதுந் தெரியா.

அன்புக்கினிய மகிழ்ந்த உள்ளத்தவனான தேவமணி இப்போது “அப்பன் பிராஞ்சு” என்னும் பெயர் பூண்டிருந் தமையானும், நீண்ட தாடியும் மழிந்த தலையுந் துற வாடையும் உடையனாயிருந்தமையானும், முன்னே உலகியல் நடையிலிருந்த அவனே இப்போது துறவு நடையிலிருக் கின்றானெனத் தெரிந்து கொள்வது இயலாததாயிற்று. இவன் ஒருநாட் காலையிற் பாவ அறிவிப்புக் கேட்கும் இருக்கைமேல் ஒரு தனியிடத்தில் அமர்ந்திருந்த நேரத்திற், கானத்தோகை அவனெதிரே முழந்தாளிட்ட நிலையிலிருந்து தன்னுள்ளத்தைத் திறந்து சொல்வாளானாள். கள்ளம் இல்லாத் தன் வாழ்க்கை வரலாற்றினை அவள் சொல்லிக்கொண்டு வந்து, பிறகு அவனது தொடர்பு ஏற்பட்ட தனது கதையின் அப்பகுதியைக் கண்ணீர் வடித்த படியாய்க் கூறத் துவங்கினாள்.

“எனது நடக்கையானது, என்னை அளவுக்கு மிஞ்சிக் காதலித்த ஒரு சிறுபிழையைத் தவிரவேறு பிழை செய்தறியாத ஒரு சிறந்த ஆண்மகனது சாவுக்குக் காரணமாயிருந்தது. அவர் உயிரோடிருந்த நாட்களில் யான் அவரை எவ்வளவு காதலித்தேனென்பதை இறைவன் அறிவான். அவர் இறந்துபோனபின்னும் அவரை நினைந்து யான் எவ்வளவு துன்பப்படுகின்றேனென்பதையும் அவனே நன்கறிவான்'

க்

6 என்று இச்சொற்களைச் சொல்லுகையில், அவள் ஆறாய்ப் பெருகுங் கண்ணீருடன் தன் கண்களை ஏறிட்டு அம் முனிவரின் முகத்தை நோக்கினாள். நோக்கினாள். இச்சொற்களைக் கேட்டதும்,நெட்டுயிர்ப்பும் பொருமுதலும் வாய்ந்த தமது குரலை அவர் ஒருவாறு அமைதிப்படுத்திக்கொண்டு, மேலும் அவள் கூறவேண்டுவதைக் கூறும்படி கட்டளையிட்டார். அங்ஙனமே, கானத்தோகை தன்னுள்ளத்துள்ள செய்திகள் அவ்வளவுங் கண்ணீர் ஒழுகியபடியே திறந்து சொல்லினள். அம்முனிவர் அவைகளைக் கேட்டதும் வாய்திறந்து அழாமல் இருக்க முடியாதவரானார். அவர் அழுதவகையில் அவர் இருந்த இருக்கையும் அசைந்துவிட்டது. அவரது துயரத்தைக் கண்ட கானத்தோகை, நற்குணத்திற் சிறந்த அம்முனிவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/263&oldid=1585503" இலிருந்து மீள்விக்கப்பட்டது