உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 18.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் - 18

தன்பாலெழுந்த இரக்கமிகுதியாலுந், தன் குற்றத்தின் கொடுமையை நினைந்ததாலுமே அங்ஙனம் பெருந்துயர் கூரலானார் எனக்கருதித், தான்செய்த தீவினைகளுக்குக் கழுவாயாக இனித் தான் கன்னிப்பெண்ணாக இருந்துவிட உறுதி செய்திருப்பதே தான் தெவமணியை நினைந்து நோற்கும் நோன்பாகுமென அவர்க்கு எடுத்து மொழிந்தாள்.

இதற்குள், தமது மனத்துயரை ஒருவாறு அடக்கி அமைதிப் படுத்திக்கொண்ட அம்முனிவர், தாம் வழங்காது விட் தமது பெயரை இப்போது அம்மங்கை கூறக் கேட்டதிலிருந்தும், பிறனொருவனுக்கு உரியவள் ஆனாள் என்றே தாங் கருதிவிட்ட அவ்விளம்பெண் அங்ஙனம் ஆதற்கு ஒரு சிறிதும் உள்ளம் இசையாளாய்த் தான் காதலித்த காதலனிடத்திலேயே கட்டுப்பட்ட மன உறுதி வாய்ந்த வளாயிருத்தலை அறிந்ததிலிருந்தும் நெஞ்சம் நெக்குரு மீண்டுங் கண்ணீர் வடிப்பாரானார். இங்ஙனம் அம்முனிவர் தாம் துயர்கூர்ந்து கண்ணீர் சிந்திக் கலுழ்தற்கிடையே, அம்மாது ஆற்றொணாத் துயர்மிக்கு அழுதலைக் கண்டு, அதனைத் தடுக்குமளவுக்குத் தம்மை அவர் தேற்றிக் கொண்டு, அம்மங்கை தானுந் தன்னைத் தேற்றிக்கொள்ளுதல் வேண்டு மென்றும், அவள் செய்த பாவம் மன்னிக்கப்பட்டதென்றும் அவள் அஞ்சிக் கலங்கியவாறு அவள் செய்த குற்றம் அத்துணைப் பெரியதன்றென்றும், அளவுக்கு மிஞ்சி அவள் உளம் வெந்து துன்புறுதற்கு இடந்தரல் ஆகாதென்றும் அடுத்தடுத்து ஆறுதல் பகர்ந்தார். அதன் பிறகு அவர் முழுதும் ஆறுதல் எய்தினவராய் அம்மாதுக்குப் பாவவிடுவிப்பு மொழிந்து மறுநாள் அவள் தம்மிடம் வந்தால், அவள் அப்போது மேற்கொண்ட கடவுள் ஊழியத்தில் நிலைப்படுதற்கு வேண்டுவன கூறி அவளைத் தாம் அதில் ஊக்கி, அதில் அவள் ஒழுக வேண்டு முறைகளைக் கற்பிப்பதாகவுஞ் சொல்லி விடுத்தார்.

அங்ஙனமே கானத்தோகை மறுநாட் காலையிலும் அம்முனிவர்பாற் போந்து தான் துறவுநிலையை மேற் காள்ள விரும்புவது தெரிவித்தாள். அம்முனிவர் தம துள்ளத்தைச் சிறந்த எண்ணங்களாலும் நினைவுகளாலும் அரண் செய்து கொண்டு, அம்மங்கை தான் மேற்கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_18.pdf/264&oldid=1585513" இலிருந்து மீள்விக்கப்பட்டது